தேசியம்
செய்திகள்

பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது?

கனடிய பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்த Edmonton நபர் கைது செய்யப்பட்டார்.

சமூக வலைத்தள பக்கத்தில் Mark Carney-யை படுகொலை செய்யப் போவதாக கொலை மிரட்டல் விடுத்த 44 வயது Edmonton நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைதானவர் Dwight Peter MacIntyre என அடையாளம் காணப்பட்டார்.

கனடிய தேசியப் பாதுகாப்பு உளவுத்துறை கூட்டு அதிரடிப் படையினர் (INSET) முன்னெடுத்த விசாரணையில் இவர் கைது செய்யப்பட்டார்.

பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக கைதான இவர் மீது முறைப்படி குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த September 4 அன்று X வலைத்தளத்தில் பயனர் ஒருவர் பிரதமரை நேரடியாக குறிவைத்து எழுதிய கொலை மிரட்டல் பதிவுகளை RCMP அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இந்த விடயம் உடனடியாக கனடாவின் ஒருங்கிணைந்த தேசிய பாதுகாப்பு அமுலாக்க குழுவின் தீவிர விசாரணைக்கு மாற்றப்பட்டது.

விசாரணை ஆரம்பமான ஐந்து நாட்களில் சந்தேக நபரை Edmonton காவல்துறையினர், Alberta RCMP பிரிவினரின் உதவியுடன் கைது செய்தனர்.

இணையக் குற்றங்களுக்குத் தகுந்த தண்டனை உண்டு என்பதை இந்தக் கைது நிரூபிக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள Dwight Peter MacIntyre எதிர்வரும் November 25 அன்று நீதிமன்றத்தில் நேரில் முன்னிலைப்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட உள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

பிரதமர் Mark Carney ஓராண்டுக்கு முன்னர் பதவியேற்றதில் இருந்து, அவருக்கு எதிராக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு பதிவாகும் முதலாவது வழக்கு இதுவல்ல என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் ஆரம்பத்தில்  பிரதமரைக் கொல்லப் போவதாக மிரட்டிய Calgary நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக இந்த ஆண்டின் ஆரம்பத்தில் Quebec மாகாணத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் இதே போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையிலடைக்கப்பட்டனர்.

Related posts

பொதுச் சேவை ஊழியர் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர பிரதமருக்கு அழைப்பு

அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுமா என்பது இன்னும் தெரியவில்லை: Mark Carney

Lankathas Pathmanathan

இறுதி நேரத்தில் அமெரிக்கா மேலதிக நிபந்தனைகளை விதித்ததை ஏற்றுக் கொண்ட Donald Trump?

Lankathas Pathmanathan

Leave a Comment