தேசியம்
செய்திகள்

வழமையான அரசியலுக்கான நேரம் இதுவல்ல: Mark Carney

வழமையான அரசியலுக்கான நேரம் இதுவல்ல என பிரதமர் Mark Carney தெரிவித்தார்.

ஆளும் Liberal அரசாங்கத்தின் தேசிய மாநாட்டை நிறைவு செய்து Mark Carney உரையாற்றினார்.

2026 தேசிய மாநாட்டுக்காக 4500 Liberal உறுப்பினர்கள் Montreal நகரில் ஒன்று கூடினர்.

அங்கு உரையாற்றிய பிரதமர், வரும் தலைமுறைகளை வரையறுக்கப் போகும் ஒரு மாற்றத்தின் நடுவில் நாடு இருக்கும் நிலையில் வழமையான அரசியலுக்கான நேரம் இதுவல்ல என கூறினார் .

வேகமான புவிசார் அரசியல், தொழில்நுட்ப மாற்றங்களை எதிர்கொள்ள கனடியர்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் பிரச்சார பாணியினால் தனது உரையில் Mark Carney அழைப்பு விடுத்தார்.

கடந்தகால Liberal பிரதமர்களின் முக்கிய சாதனைகளையும் அவர் பாராட்டினார்.

திங்கட்கிழமை (13) நடைபெறவிருக்கும் இடைத் தேர்தல்களுக்கு முன்னதாக இந்த மாநாடு முடிவுக்கு வந்தது .

இந்தத் தேர்தல்கள் Liberal கட்சிக்கு பெரும்பான்மை அரசாங்கத்தை அமைத்துக் கொடுக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

26 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் EI காப்பீடு!

Lankathas Pathmanathan

$3.6 பில்லியன் பற்றாக்குறையை பதிவு செய்த கனேடிய அரசாங்கம்

Lankathas Pathmanathan

Belleville யூத வழிபாட்டு தல துப்பாக்கிச்சூடு ஒரு வெறுப்புணர்வு தாக்குதல்!

Lankathas Pathmanathan

Leave a Comment