Toronto நகர முதல்வராக இரண்டாவது முறையாக Olivia Chow பதவியேற்றார்.
புதிய Toronto மாநகர சபையின் ஆரம்பக் கூட்டம் புதன்கிழமை (18) நடைபெற்றது.
இதில் Olivia Chow இரண்டாவது முறையாக Toronto நகர முதல்வராக அதிகாரபூர்வமாக பதவியேற்று கொண்டார்.
மேலும் அக்கறையுள்ள, கட்டுப்படியாகக்கூடிய, பாதுகாப்பான நகரத்தை உருவாக்குவோம் என அவர் தனது பதவியேற்பு உரையில் உறுதியளித்தார்.
புதிய மக்கள் ஆணையை வழங்கிய Toronto குடியிருப்பாளர்களுக்கு அவர் தனது உரையில் நன்றி தெரிவித்தார்.
Toronto மாநகர சபையின் இந்தப் புதிய பதவிக்காலத்தில், இரண்டு தமிழர்கள் உட்பட மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 நகரசபை உறுப்பினர்களுடன் 7 புதிய உறுப்பினர்களும் இணைந்துள்ளனர்.
முதலாவது நாள் அமர்வின் போது புதிய சபாநாயகராக Spadina-Fort York தொகுதி நகரசபை உறுப்பினர் Ausma Malik தெரிவானார்.
Don Valley North தொகுதி உறுப்பினர் Shelley Carroll துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மாநகர சபையின் முதல் கூட்டம் வியாழக்கிழமையும் (19) தொடரவுள்ளது;
அன்றைய தினம் பல்வேறு குழுக்கள், முகமைகள், வாரியங்கள், சமூக மன்றங்களுக்கான (Community Councils) உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
