November 19, 2026
தேசியம்
செய்திகள்

அமெரிக்கத் தூதுவரை வெளியேற்ற 2.85 லட்சம் கனடியர்கள் கையெழுத்து?

கனடாவுக்கான அமெரிக்கத் தூதுவரை வெளியேற்ற கோரும் மனுவில் 285,000-க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

கனடாவுக்கான அமெரிக்கத் தூதுவர் Pete Hoekstra-வை கனடாவிலிருந்து வெளியேற்றக் கோரி ஆரம்பிக்கப்பட்ட இணையவழி மனுவில் 285,340 கனடியர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த மனுவில் கையெழுத்து பெறும் காலக்கெடு புதன்கிழமையுடன் (18) நிறைவடைந்துள்ள நிலையில், இம்மனு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கடந்த July மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த மனுவில் Pete Hoekstra மீது கனடா-அமெரிக்கா இடையிலான தூதரக உறவுகளை சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து பொதுவெளியில் கருத்துக்களை தெரிவித்து வருவது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக இணைத்துக் கொள்வதாக ஜனாதிபதி Donald Trump விடுத்த மிரட்டல்களை நியாயப்படுத்தியதாகவும் Pete Hoekstra மீது குற்றம் சாட்டப்பட்டது.

அமெரிக்க உள்நாட்டு அரசியலில் கனடா தலையிடுவதாக குற்றம் சாட்டும் அதே வேளையில், தூதரக மரபுகளுக்கு முரணாகக் கனடிய அரசியல் விவகாரங்களில் Pete Hoekstra தொடர்ந்து கருத்துக் கூறி வருவதாகவும் இந்த மனு குறிப்பிடுகிறது.

இந்த மனுவை பசுமைக் கட்சியின் முன்னாள் தலைவர் Elizabeth May  நாடாளுமன்றத்தில் முறைப்படி தாக்கல் செய்யவுள்ளார்.

நாடாளுமன்ற விதிகளின்படி, இம்மனு சபையில் சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 45 நாட்களுக்குள் கனடிய அரசு இதற்கு தனது அதிகாரப்பூர்வ பதிலை அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க தூதுவரை ‘விரும்பத்தகாத நபராக’ அறிவித்து கனடாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என இம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்ய குறைந்தபட்சம் 500 கையெழுத்துக்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில், இம்மனு 3 லட்சம் வரையிலான கையெழுத்துக்களை பெற்றுள்ளது.

Related posts

ஐ. நா. உயர் ஆணையாளர் அலுவலகத்துடன் ஒத்துழைக்குமாறு இலங்கை அரசுக்கு கனடா ஊக்குவிப்பு

Gaya Raja

வீடுகளில் புகுந்து 50-க்கும் மேற்பட்ட ஆடம்பர வாகனங்களைத் திருடிய 4 சிறுவர்கள் கைது!

Lankathas Pathmanathan

Alaskaவில் சுட்டு வீழ்த்தப்பட்ட அடையாளம் காணப்படாத பொருள் கனேடிய வான்வெளியை நோக்கி பயணித்தது?

Lankathas Pathmanathan

Leave a Comment