Toronto பெரும்பாக பகுதியில் (GTA) வாகனங்கள் இழுத்துச் செல்லும் Towing தொழில் துறையில் ஆதிக்கம் செலுத்துவதற்கு செயல்பட்டு வந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பலை Toronto காவல்துறையினர் அதிரடியாக முறியடித்துள்ளனர்.
Project Swords எனப் பெயரிடப்பட்ட 14 மாத காலத் தீவிர விசாரணையில், Towing தொழில் துறையைச் சேர்ந்த இருவரை கொலை செய்யும் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டதுடன், 21 பேர் கைது செய்யப்பட்டு 112 குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Toronto காவல்துறை தலைமையகத்தில் புதன்கிழமை (18) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த விசாரணை குறித்த தகவல்கள் வெளியாகின.
Towing தொழில்துறையின் போட்டிப் பிரிவான The Union குழுவைச் சேர்ந்த Farhad Zoghi-Lahmi உட்பட இருவரை கொலை செய்யத் திட்டமிட்டு, அவர்களைக் கண்காணித்து வந்த குழுவினரைக் காவல்துறையினர் உரிய நேரத்தில் தலையிட்டு தடுத்து நிறுத்தினர்.
இந்தக் குற்றச் செயலின் தலைவராக Whitby நகரைச் சேர்ந்த 43 வயதான மனோகரன் (மனோ) சுப்பிரமணியம் செயல்பட்டதாகக் காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.
Scarborough நகரில் Williams Towing நிறுவனத்தை நடத்தி வரும் இவர் நவம்பர் 12 கைது செய்யப்பட்டு அவர் மீது கொலைச் சதி, மோசடி உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.,
Toronto காவல்துறையுடன் அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் வைத்திருந்த நான்கு Towing நிறுவனங்களில் ஒன்றான Williams Towing நிறுவனத்தின் ஆவணங்களில் மனோகரன் சுப்பிரமணியத்தின் பெயர் இல்லாவிட்டாலும், அதன் நடைமுறை தலைவராக அவர் செயல்பட்டு வந்துள்ளார் என்பது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Toronto நகரின் 41, 42, 43, 55 ஆகிய காவல் பிரிவுகளில் சேவை வழங்கி வந்த Williams Towing நிறுவனத்துடனான தனது ஒப்பந்தத்தை Toronto காவல்துறை உடனடியாக இரத்து செய்துள்ளது.
புதிய நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் வரை தற்காலிக Towing நிறுவனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன
November 12-ஆம் திகதி GTA முழுவதும் 24 இடங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 21 பேர் கைது செய்யப்பட்டதுடன், துப்பாக்கிகள், போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதில் கைதானவர்களின் முழுமையான பட்டியல்:
Toronto நகரைச் சேர்ந்த 38 வயதான Dinesh BATTULA,
Toronto நகரைச் சேர்ந்த 41 வயதான Fedrol BRYAN,
Beaverton நகரைச் சேர்ந்த 48 வயதான Harithas GNANALINGAM,
Whitchurch-Stouffville நகரைச் சேர்ந்த 41 வயதான Vathsuthan GOBALAKIRISHNAN,
Toronto நகரைச் சேர்ந்த 29 வயதான Mohamad-Ali HAMAM,
Toronto நகரைச் சேர்ந்த 29 வயதான Dogan KRUEZI,
Vaughan நகரைச் சேர்ந்த 34 வயதான Foster NYARKO.
Toronto நகரைச் சேர்ந்த 31 வயதான Shiv PATEL,
Toronto நகரைச் சேர்ந்த 46 வயதான Ratnakumar PIRAKALATHAN,
Toronto நகரைச் சேர்ந்த 45 வயதான Suman PUSHPARAJAH,
Markham நகரைச் சேர்ந்த 25 வயதான Nirjan RAGUTHAS,
Keswick நகரைச் சேர்ந்த 50 வயதான Sivanesan RAJENDRAM,
Oshawa நகரைச் சேர்ந்த 28 வயதான Sadeed REHMAN,
Toronto நகரைச் சேர்ந்த 32 வயதான Kokul SENTHILVEL,
Pickering நகரைச் சேர்ந்த 34 வயதான Piratwipan SIVAKUMARAN,
Whitby நகரைச் சேர்ந்த 43 வயதான Manoharan SUBRAMANIAM,
Toronto நகரைச் சேர்ந்த 30 வயதான Thanugopithan SUGUMARASUNGHAM,
Toronto நகரைச் சேர்ந்த 39 வயதான Thanaraj THANGARAJAH,
Whitby நகரைச் சேர்ந்த 41 வயதான Jeyanan THANGAVADIVEL,
Caledon நகரைச் சேர்ந்த 26 வயதான Kiranpal TOOR,
Toronto நகரைச் சேர்ந்த 37 வயதான Kranthi VASIREDDY.
இந்த விசாரணையில் முழுமையான தானியங்கி துப்பாக்கியாக மாற்றப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட பல துப்பாக்கிகள், 84 தோட்டாக்கள், சுமார் 250 gram cocaine போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தவிரவும் Toronto கிழக்குத் தடுப்புக்காவல் மையத்தின் சிறைச்சாலை ஊழியரான Pickering நகரைச் சேர்ந்த பிரத்விபன் சிவகுமாரன் நம்பிக்கைத் துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்
கொலைச் சதிக்கு மூன்று பேர், ஒழுங்கமைக்கப்பட்ட வாகனத் திருட்டு தொடர்பாக ஆறு பேர், தீவைப்பு சம்பவம் தொடர்பாக இருவர், போலி physiotherapy நிலையங்களை நடத்தியது தொடர்பாக மூவர், பங்குச் சந்தை மோசடி தொடர்பாகவும் கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த வருடம் September மாதம் Project Yankee நடவடிக்கையின் கீழ் 20 பேர் கைது செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக, போட்டிப் பிரிவை இலக்கு வைத்து இந்த Project Swords நடவடிக்கை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதில் கைதானவர்களுக்கு எதிரான குற்றசாட்டுகள் எதுவும் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை
