November 16, 2025
தேசியம்
செய்திகள்

தேர்தலில் ஆயிரக்கணக்கானவர்கள் வாக்களிக்க முடியாத நிலை!

COVID தொற்று காரணமாக வரவிருக்கும் தேர்தலில் ஆயிரக்கணக்கான கனேடியர்கள் வாக்களிக்க முடியாது என கனேடிய தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தேர்தல் நாளில் வாக்களிக்க முடியாது என தேர்தல் திணைக்களம் கூறியது.

செவ்வாய் மாலையுடன் தபால் மூலம் வாக்களிக்க பதிவு செய்யும் காலக்கெடு முடிவடைந்த நிலையில், தற்போது முதல் தேர்தல் நாளுக்கு இடையில் தொற்று கண்டறியப்பட்ட எவரும் வாக்களிக்க முடியாத  நிலை தோன்றியுள்ளது.

கனடா நாளாந்தம் சராசரியாக 4,000 புதிய COVID தொற்றுக்களை பதிவு செய்கிறது.

இதன் மூலம் 20,000 கனேடியர்கள் வரை திங்கள்கிழமைக்குள் தபால் மூலம் வாக்களிப்பதற்கான காலக்கெடுவை இழப்பதோடு நேரிலும்  வாக்களிக்க முடியாது நிலை தோன்றியுள்ளது.

Related posts

கனடாவின் முதல் முழு அளவிலான வணிக மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் திறப்பு

Lankathas Pathmanathan

தனிமைப்படுத்தப்பட்டுள்ள Ontario முதல்வர்!

Gaya Raja

Patrick Brownக்கு ஆதரவு தெரிவித்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆதரவை விலக்கியுள்ளனர்!

Lankathas Pathmanathan

Leave a Comment