November 13, 2026
தேசியம்
செய்திகள்

அமெரிக்காவுக்கான கனடியர்களின் பயணம் தொடர்ந்து ஏழாவது மாதமாக அதிகரிப்பு!

அமெரிக்காவுக்கான கனடியர்களின் பயணம் கடந்த மாதம் அதிகரித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் புறக்கணிப்புகளுக்கு மத்தியில் இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

கடந்த மாதத்தில் அமெரிக்காவுக்கான கனடியர்களின் பயணம் 3 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் தொடர்ந்து ஏழாவது மாதமாக அமெரிக்கப் பயணங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது பதிவாகியுள்ளது.

கடந்த மாதத்தில் கனடியர்கள் வாகனம் மற்றும் விமானம் மூலமாக அமெரிக்காவிற்கு 1.9 மில்லியன் பயணங்களை மேற்கொண்டுள்ளனர்;

இது 2025 October மாதத்தை விட 3 சதவீதம் அதிகமாகும்.

இதில் சாலை வழியிலான பயணங்கள் 2.2 சதவீதமும், விமானப் பயணங்கள் 5.6 சதவீதமும் உயர்ந்துள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி Donald Trumpகனடா மீது வர்த்தகப் போரை ஆரம்பித்ததைத் தொடர்ந்து, அமெரிக்கப் பயணங்களைப் புறக்கணித்து வந்த கனடியர்களின் போக்கில் இது ஒரு மாறுதலை வெளிப்படுத்துகிறது.

இருப்பினும், வர்த்தகப் போருக்கு முந்தைய 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, சாலைப் பயணங்கள் இன்னும் 29 சதவீதமும், விமானப் பயணங்கள் 19 சதவீதமும் குறைவாகவே உள்ளன.

October 2026-இல் கனடியர்கள் விமானம் மூலம் மேற்கொண்ட ஏனைய வெளிநாட்டுப் பயணங்கள் 1 மில்லியனாகப் பதிவாகியுள்ளன.

கடந்த மாதத்தில் கனடாவுக்கு வருகை தந்த அமெரிக்கர்களின் எண்ணிக்கையும் 2025 October மாதத்தை விட 8.1 சதவீதம் அதிகரித்து 1.5 மில்லியனாகப் பதிவாகியுள்ளது.

Related posts

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Woodbine வணிக வளாக துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Lankathas Pathmanathan

Liberal அரசாங்கத்தில் இணையும் NDP நாடாளுமன்ற உறுப்பினர்கள்?

Lankathas Pathmanathan

Leave a Comment