November 12, 2026
தேசியம்
செய்திகள்

கட்டுப்பாட்டை மீறிய மாணவர் கொண்டாட்டம்: வன்முறையில் ஈடுபட்ட 15 பேர் இதுவரை கைது!

Guelph பல்கலைக்கழகக் கொண்டாட்ட வன்முறை வழக்கில் கைதானவர்கள் மொத்த எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.

கடந்த September மாதம் Chancellor’s Way பகுதியில் சுமார் 15,000 பேர் திரண்ட அனுமதியற்ற தெருக் கொண்டாட்டம் கட்டுப்பாட்டை மீறி வன்முறையாக மாறியது.

இதில் வன்முறையில் ஈடுபட்ட 15 பேரை இதுவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே நவம்பர் 4-ம் திகதி 17 முதல் 21 வயதுக்குட்பட்ட 12 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த வாரம் மேலும் மூவர் கைதாகியுள்ளனர்.

இந்த வழக்கில் இதுவரை 17 பேரின் அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வன்முறையில் ஈடுபட்ட மேலும் 17 சந்தேக நபர்களை அடையாளம் காணும் பணியில் புலனாய்வாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

இதில் தேடப்பட்டு வரும் நபர்களின் புகைப்படங்கள் Guelph காவல்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.

Related posts

வெளிநாடுகளுடன் கூட்டுச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசத் துரோகிகள்: Jagmeet Singh

Lankathas Pathmanathan

Torontoவில் முதலாவது ஆட்டத்தில் Blue Jays அணி!

Lankathas Pathmanathan

COVID புதிய திரிபினால் 60% உயர்கிறது இறப்பு அபாயம்!

Gaya Raja

Leave a Comment