November 12, 2026
தேசியம்
செய்திகள்

ஐரோப்பிய மாநாட்டில் உரையாற்றும் ஒரே ஐரோப்பியர் அல்லாத நாடு கனடா: Mark Carney அதிரடிப் பயணம்!

ஐரோப்பிய அரசியல் சமூக உச்சிமாநாட்டில் (EPC) பங்கேற்பதற்காக பிரதமர் Mark  Carney அயர்லாந்து சென்றடைந்தார்.

அயர்லாந்து தலைநகரில் நடைபெறும் EPC உச்சிமாநாட்டில் பங்கேற்கக் Mark Carney புதன்கிழமை (11) Dublin சென்றடைந்துள்ளார்.

கனடா – ஐரோப்பா இடையிலான இராஜதந்திர, பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த மாநாட்டில் Mark  Carney பங்கேற்கிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) முதல் இணை உறுப்பினராக கனடாவை இணைப்பதற்கான திட்டங்களை இரு தரப்பும் தீவிரமாக முன்னெடுத்து வரும் நிலையில் இந்த பயணம் அமைகிறது.

கடந்த March மாதம் நடந்த கூட்டத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த அமைப்பில் பிரதமர் கார்னி உரையாற்றவுள்ளார்.

இம்முறை இந்த மாநாட்டில் உரையாற்ற அழைக்கப்பட்ட ஒரே ஐரோப்பியர் இல்லாத நாடு கனடா மட்டுமே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பிரதமர் அயர்லாந்தில் 24 மணி நேரத்திற்கும் குறைவாகவே தங்கியிருக்க உள்ளார்.
அவர் தொடர்ந்து ASEAN கூட்டமைப்பு மாநாடு, Francophonie உச்சி மாநாடு, 1. APEC  உச்சி மாநாடு ஆகியவற்றில் பங்கேற்கவுள்ளார்.

பிரதமரின் இத்தகைய வெளிநாட்டுப் பயணங்கள் உள்நாட்டில் உள்ள கனடியர்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்க்க எந்த உதவியும் செய்யவில்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

Related posts

மொத்த உள்நாட்டு உற்பத்தி மீண்டும் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

G7 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் கனடிய பிரதமர்!

Gaya Raja

வாகன திருட்டு விசாரணையில் இரண்டு தமிழர்கள் உட்பட 119 பேர் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment