நாடாளுமன்ற இடைத் தேர்தலில் ஆறு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை புதிய ஜனநாயகக் கட்சி (NDP) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
நாடளாவிய ரீதியில் மூன்று மாகாணங்களில் வெற்றிடமாக உள்ள ஆறு தொகுதிகளுக்கு எதிர்வரும் 7-ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில் போட்டியிடும் தனது அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் பட்டியலை NDP வெளியிட்டுள்ளது.
November 1-ம் திகதி பிரதமர் Mark Carney இத்தேர்தலை அறிவித்ததைத் தொடர்ந்து, NDP தலைவர் Avi Lewis தலைமையில் இந்த வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
Ontario மாகாணத்தின் Scarborough North தொகுதியில் Kingsley Kwok, Brantford–Brant South தொகுதியில் Brad Ward ஆகியோர் NDP வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
Quebec மாகாணத்தின் மூன்று தொகுதிகளான Rosemont–La Petite-Patrie, Laurier–Sainte-Marie, Saint-Hyacinthe–Bagot–Acton தொகுதிகளில் முறையே Pierre Céré, Nimâ Machouf, Mathieu Boisvert ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
தவிரவும் Saskatchewan தொகுதிகளான Yorkton–Melville தொகுதியில் Tammy Bobyk-Jacquemart வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டார்.
இந்தத் தொகுதிகளில் முன்கூட்டிய வாக்குப்பதிவு November 27 முதல் 30 வரை காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடைபெறும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.
இறுதி வாக்குப்பதிவு December 7-ஆம் திகதி காலை 9:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை நடைபெறவுள்ளது.
