Ontario மாகாணத்தில் 8 புதிய பிராந்திய தலைவர்களை Doug Ford அரசாங்கம் நியமித்தது.
Toronto நகரைச் சுற்றியுள்ள மாபெரும் 8 உள்ளாட்சி பிராந்தியங்களுக்கு புதிய தலைவர்களை Doug Ford அரசு உத்தியோகபூர்வமாக நியமித்துள்ளது.
Durham, Halton, Niagara, Peel, Waterloo, York பிராந்தியம், Muskoka District, Simcoe County ஆகியவற்றை மேற்பார்வை செய்ய இந்த நியமங்களை அமைச்சர் Rob Flack செவ்வாய்க்கிழமை (10) அறிவித்தார்.
Ontario மாகாணத்தில் உள்ளாட்சி நிர்வாகங்களை மாகாண அரசின் கொள்கைகளோடு முழுமையாக ஒருங்கிணைக்கும் நோக்கில் இந்த நியமனம் அமைகிறது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 8 புதிய பிராந்திய தலைவர்கள்:
1. Kevin Ashe – Durham பிராந்தியத் தலைவர்
2. Ann Mulvale – Halton பிராந்தியத் தலைவர்
3. Frank Campion – Niagara பிராந்தியத் தலைவர்
4. Nando Iannicca – Peel பிராந்தியத் தலைவர்
5. Scott Davey – Waterloo பிராந்தியத் தலைவர்
6. Steven Del Duca – York பிராந்தியத் தலைவர்
7. Scott Aitchison – Muskoka மாவட்டத் தலைவர்
8. Don McIsaac – Simcoe County தலைவர்
மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்த உள்ளூர் நகராட்சிகளை மாகாண அரசோடு ஒரே நேர்க்கோட்டில் வைத்திருக்க இந்த நியமனங்கள் அவசியமாகின்றன என அமைச்சர் Rob Flack கூறினார்.
Doug Ford அரசு இந்த ஆண்டின் ஆரம்பத்தில் கொண்டுவந்த புதிய அவசரச் சட்டத்திருத்தங்களின்படி, இந்த நியமிக்கப்பட்ட 8 தலைவர்களுக்கும் Strong Chair Powers எனப்படும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், அந்தந்தப் பிராந்திய சபைகளின் ஒப்புதல் இன்றியே மாகாண அரசின் வளர்ச்சித் திட்டங்களை இவர்களால் தன்னிச்சையாக நிறைவேற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிரடி நியமனங்களுக்கு புதிய ஜனநாயகக் கட்சி (NDP), Liberal கட்சி மாகாணசபை உறுப்பினர்கள் தங்களின் கடுமையான கண்டனங்களை உத்தியோகபூர்வமாக பதிவு செய்துள்ளனர்.
பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பிராந்தியத் தலைவர்களை, மாகாண அரசு தன்னிச்சையாக நியமிப்பது உள்ளாட்சி ஜனநாயகத்தின் அதிகாரங்களை முழுமையாக பறிக்கும் செயல் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
