Alberta மாகாணத்தின் CFB Wainwright இராணுவ முகாமில் கடந்த மாதம் நேரிட்ட கொடூரத் தீ விபத்தில் சிக்கிய கனடியப் பாதுகாப்புப் படையினர் 9 பேரின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் கனடிய இராணுவத்தினரில் 15 பேர் Ventilator செயற்கை சுவாசக் கருவிகள் உதவியுடன் தீவிரச் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தகவல் வெளியானது.
அவர்களில் 9 பேரின் உடல்நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் நடந்த இந்த இராணுவ முகாம் தீ விபத்தில் 4 கனடிய இராணுவ உறுப்பினர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகிப் பலியாகினர்.
இதில் 39 பேர் காயமடைந்தனர்.
இதில் படுகாயமடைந்தவர்கள் 14 பேர் Edmonton வைத்தியசாலைக்கு, 7 பேர் Calgary வைத்தியசாலைக்கு அவசரமாக மாற்றப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட இராணுவத்தினரில் மேலும் 14 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், எஞ்சியுள்ள 25 பேர் தொடர்ந்து மருத்துவமனைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
