Brampton Assembly ஆலையை விற்பனை செய்வதாக Stellantis நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த ஆலையை பாதுகாப்புத் துறை வாகனங்களை தயாரிக்கும் Roshel நிறுவனத்திற்கு விற்பனை செய்வதாக Stellantis அறிவித்துள்ளது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த விற்பனை பூர்த்தியாகும் என திங்கட்கிழமை இரு நிறுவனங்களும் வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கை உறுதிப்படுத்துகிறது.
இந்தத் தன்னிச்சையான விற்பனை முடிவு தங்களின் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் துரோகம் என கனடிய வாகனத் தொழிலாளர் தொழிற்சங்கம் குற்றம் சாட்டியது.
கடந்த 2023 இறுதி முதல் தொழிற்சாலையின் செயல்பாடுகள் முழுமையாக முடங்கியுள்ள நிலையில் அங்கிருந்து 2,200-க்கும் அதிகமானவர்கள் தமது தொழில்களை இழந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு எட்டப்பட்ட கூட்டு ஒப்பந்தங்களின்படி, இந்த ஆலையை மின்சார வாகன (EV) உற்பத்தி நிலையமாக மாற்றித் தொழிலாளர்களின் வேலைகளை பாதுகாக்க Stellantis நிறுவனம் சட்டபூர்வமாக உறுதியளித்திருந்ததாக தொழிற்சங்கம் கூறியது.
ஆனாலும் அதற்கு மாறாக தற்பொழுது ஆலையை ஒரு இராணுவ, பாதுகாப்பு வாகனத் தயாரிப்பு நிறுவனத்திற்கு விற்பனை செய்திருப்பது விதிமீறல் என தொழிற்சங்கத்தின் தேசியத் தலைவர் Lana Payne கூறினார்.
Stellantis நிறுவனம் எடுத்த இந்த முடிவு, Brampton தொழிலாளர்களுக்கு அவர்கள் அளித்த சட்டபூர்வமான வாக்குறுதிகளை ஒருபோதும் அழித்துவிடாது என கனடாவின் தொழில்துறை அமைச்சர் Mélanie Joly தெரிவித்தார்.
இரு நிறுவனங்களுக்கும் இடையிலான இந்த விற்பனையை அமைச்சர் Mélanie Joly மிகக் கடுமையாக விமர்ச்சித்தார்.
இந்த நிலையில் கனடிய தொழிலாளர்களை பாதுகாக்க பிரதமர் Mark Carney தவறிவிட்டுள்ளதாக Conservative தலைவர் Pierre Poilievre, NDP தலைவர் Avi Lewis ஆகியோர் தமது அறிக்கைகள் மூலம் குற்றம் சாட்டினர்.
