NHL பனிச் சறுக்கல் விளையாட்டு உலகின் நட்சத்திரமும், Washington Capitals அணியின் பிரதான விளையாட்டு வீரருமான கேப்டனுமான Alex Ovechkin-னின் Ottawa வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
ரஷ்ய ஜனாதிபதியுடன் Alex Ovechkin கொண்டுள்ள நெருக்கம் இந்தப் போராட்டத்தின் பிரதான காரணியாக அமைகிறது.
அவர் செவ்வாய்க்கிழமை (10) விளையாடவுள்ள Canadian Tire Centre மைதானத்திற்கு வெளியே இந்த பிரம்மாண்ட போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Alex Ovechkin-க்கு எதிராக கனடிய மத்திய அரசு உடனடி பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் எனப் பகிரங்கமாகக் கோரும் புதிய மனு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள சூழலில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
ரஷ்ய ஜனாதிபதியுடன் கொண்டுள்ள அப்பட்டமானதும் பகிரங்கமானதுமான நட்பை அடிப்படையாகக் கொண்டு Alex Ovechkin உடனடியாக கனடாவின் அதிகாரப்பூர்வ சிறப்புப் பொருளாதார தடை பட்டியலில் இணைக்கப்பட வேண்டும் என கனடிய பிரதமரிடம் இந்த மக்கள் மனுவில் அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Ottawa Senators அணியை Alex Ovechkin பிரதிநிதித்துவப்படுத்தும் Washington Capitals அணி செவ்வாய் மாலை எதிர்கொள்கிறது.
இதில் பங்கேற்பதற்காக Alex Ovechkin கனடிய தலைநகர் Ottawa வந்துள்ளார்.
உக்ரைனிய-கனடியச் சமூகத்தினர், மனித உரிமை ஆர்வலர்களுடன் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.
தொடரும் ரஷ்யா-உக்ரைன் போரின் மத்தியில் ரஷ்ய ஜனாதிபதி Vladimir Putin-னுடன் Alex Ovechkin பகிரங்கமான நட்பு பாராட்டி வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த நிலையில் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய ஜனாதிபதியை தொடர்ந்து ஆதரிக்கும் ஒரு விளையாட்டு வீரரை, கனடிய மண்ணில் கொண்டாடுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என Ottawa உக்ரைனிய ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டு மைதானத்திற்கு வெளியே அமைதியான முறையில் பதாகைகளை ஏந்தி இந்தத் தார்மீக போராட்டத்தை நடத்த ஆர்வலர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதனால் போட்டி நடைபெறும் நேரத்தில் ரசிகர்களின் கூட்ட நெரிசல், பாதுகாப்புச் சவால்களை கையாள Ottawa காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு வளையத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
