Liberal அரசின் குடியேற்ற எண்ணிக்கையில் முறைகேடு உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் Pierre Poilievre தெரிவித்தார்.
குடியேற்ற எண்ணிக்கை குறித்த உண்மையான புள்ளிவிவரங்களை Mark Carney அரசாங்கம் மறைப்பதாக Pierre Poilievre குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய குடியேற்ற நிலைகள் திட்டத்தில் Liberal அரசு உண்மையான எண்ணிக்கையை மறைத்து, “குடியேற்றக் கணக்குகளில் முறைகேடு” செய்துள்ளதாக Pierre Poilievre பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் பிரதமர் Justin Trudeau அரசின் எண்ணிக்கையை விட அதிக குடியேறிகளை Mark Carney அரசு நாட்டுக்குல் அனுமதிப்பதாக Brampton நகரில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Pierre குற்றம் சாட்டினார்.
புதிய குடியேற்ற நிலைகள் திட்டத்தில் ஏற்கனவே கனடாவில் இருப்பவர்கள் மீது கவனம் செலுத்தப்படுவதாக கூறப்பட்டாலும், நாட்டிற்குள் கொண்டுவரப்படும் புதிய குடியேறிகளின் உண்மையான எண்ணிக்கை குறித்த உண்மைகளை Liberal அரசு மறைத்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Liberal அரசு தனது அதிகாரப்பூர்வ இலக்காக ஆண்டுக்கு 380,000 நிரந்தர குடியிருப்பாளர்களை மட்டுமே அனுமதிப்பதாக குறிப்பிட்டுள்ளது.
ஆனாலும் இதில் உண்மை நிலவரம் முற்றிலும் வேறானது என Conservative கட்சி தெரிவிக்கிறது.
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 380,000 நிரந்தர குடியிருப்பாளர்கள் என்ற பிரதான இலக்கோடு சேர்த்து, இந்த ஒரே ஆண்டில் மட்டும் மேலும் 200,000 தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறுகிறது.
இதன் மூலம் உண்மையான புள்ளிவிவரங்களை கனடியப் பொதுமக்களிடம் இருந்து மறைப்பதாக Pierre Poilievre தெரிவித்தார்.
