தேசியம்
செய்திகள்

கட்சித் தலைமையில் இருந்து வெளியேற்றுவதில் சீன தலையீடு பங்கு வகுத்திருக்கலாம்: Erin O’Toole

கனடிய அரசியலில் சீன  தலையீடு தன்னை கட்சித் தலைமையில் இருந்து வெளியேற்றுவதில் பங்கு வகுத்திருக்கலாம் என முன்னாள் Conservative தலைவர் Erin O’Toole குற்றம் சாட்டினார்.

கனடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடு குறித்த விசாரணைக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் இந்த தகவல் வெளியானது .

2021 தேர்தலை தொடர்ந்து தலைமை மறு ஆய்வுக்கு அழைப்பு விடுத்த மனுவின் பின்னணியில் உள்ள நபரின் நோக்கங்கள் குறித்து தனக்கு சந்தேகம் இருப்பதாக Erin O’Toole கூறினார்.

ஆனாலும் இந்த தலைமை மறு ஆய்வுக்கான 2021 மனுவின் பின்னணியில் உள்ள கட்சி உறுப்பினர், Bert Chen இந்த குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுக்கின்றார்.

கட்சித் தலைவர் பதவியிலிருந்து தன்னை வெளியேற்றியதில் வெளிநாட்டு தலையீடு ஒரு பங்கை வகித்திருக்கலாம் என Erin O’Toole நம்புகிறார்.

Bert Chen, சீன மக்கள் குடியரசு அரசாங்கத்துடன் உறவுகளைக் கொண்டிருந்ததாக Erin O’Toole தெரிவித்தார்.

Erin O’Toole தலைமையிலான Conservative கட்சி 2021 தேர்தலில் தோல்வியடைந்தது.

இந்த தேர்தலில் மக்கள் விருப்பு வாக்குகளை அதிக அளவில் பெற்ற போதிலும், 338 தொகுதிகளிலும் 119 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

Related posts

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள்: ஹரி ஆனந்தசங்கரி

Gaya Raja

கனடாவின் பெரும்பாலான பகுதிக்கும் கடுமையான குளிர் எச்சரிக்கை

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசன பகிர்வு கணிப்பு – May 24, 2022 (செவ்வாய்)

Lankathas Pathmanathan

Leave a Comment