தேசியம்
செய்திகள்

காசாவில் கொல்லப்பட்ட கனடியர் அடையாளம் காணப்பட்டார்!

காசாவில் கொல்லப்பட்ட கனடியர் அடையாளம் காணப்பட்டார்.

திங்கட்கிழமை (01) இஸ்ரேலிய இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் காசா பகுதியில் 7 உதவிப் பணியாளர்கள் பலியாகினர்.

இந்த தாக்குதல் ஒரு சோகமான தவறு என இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu வர்ணித்துள்ளார்.

இந்த தாக்குதலில் பலியானவர்களில் கனடியர் ஒருவரும் அடங்குகின்றார்.

பலியான கனடியர் 33 வயதான Jacob Flickinger என குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டார்.

பலியானவர் Quebec மாகாணத்தை சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் என தெரியவருகிறது.

அவர் ஒரு வயது மகனின் தந்தையாவார்.

Jacob Flickinger கனடிய – அமெரிக்க இரட்டை குடியுரிமை பெற்றவர்.

Quebecகின் Royal 22e படைப்பிரிவில் காலாட்படை உறுப்பினராக இவர், கனடிய இராணுவத்தில் பணியாற்றினார் என்பதை கனடிய ஆயுதப் படையினர் புதன்கிழமை (03) உறுதிப்படுத்தினர்.

2008 முதல் 2019 வரை அவர் இராணுவத்தில் பணியாற்றினார் என கனடிய ஆயுதப் படையினர் தெரிவித்துள்ளனர்.

March மாத ஆரம்பம் முதல் World Central Kitchen  தொண்டு நிறுவனத்திற்காக Jacob Flickinger தொண்டாற்றி வருகிறார்.

இவர்கள் மீதான தாக்குதல் உதவி பணியாளர்களை இலக்கு வைக்கப்பட்டது என Jacob Flickingerரின் பெற்றோர் கூறுகின்றனர்.

Related posts

Greenbelt ஊழலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை: Ontario முதல்வர்

Lankathas Pathmanathan

Quebec: AstraZeneca தடுப்பூசியை பெறக்கூடியவர்களின் வயதெல்லையை குறைப்பது குறித்து ஆலோசனை!

Gaya Raja

British Colombiaவில் அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் கட்டாய தடுப்பூசி காலக்கெடு

Lankathas Pathmanathan

Leave a Comment