கனடிய அரசாங்கம் தனது புதிய குடிவரவு கொள்கையை அறிவித்தது.
கனடாவில் தங்கியிருக்கும் 200,000 தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை (PR) வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கனடாவில் தங்கியிருக்கும் 200,000 தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை (PR) வழங்க மத்திய Liberal அரசு முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நாட்டின் புதிய குடிவரவுக் கொள்கைகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து புதிதாக வரும் குடியேற்ற வரம்புகளை நிலைநிறுத்தவும் மத்திய அரசு அதிரடியாக முடிவு செய்துள்ளது.
2027 முதல் 2029 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கனடா 380,000 நிரந்தர குடியிருப்பாளர்களை நாட்டுக்குள் அனுமதிக்க திட்டமிட்டுள்ளது.
தவிரவும் ஆண்டுக்கு 370,000 தற்காலிக குடியிருப்பாளர்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
