September 13, 2024
தேசியம்
செய்திகள்

July இறுதிக்குள் கனடா குறைந்தது 55 மில்லியன் தடுப்பூசிகளைப் பெறும்

அடுத்த மாதத்தின் இறுதிக்குள் கனடா குறைந்தது 55 மில்லியன் தடுப்பூசிகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த தகவலை வெளியிட்டார்.

இவற்றின் 7 மில்லியன் Moderna தடுப்பூசிகள் இந்த மாதம் கனடாவை வந்தடையவுள்ளன. அடுத்த வாரம் முதல் Moderna தடுப்பூசிகள் கனடாவுக்கு விநியோகிக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

கனடா இந்த மாதம் தொடர்ந்தும் வாராந்தம் 2.4 மில்லியன் Pfizer தடுப்பூசிகளை பெறவுள்ளது. அடுத்த மாதம் இந்த எண்ணிக்கை வாராந்தம் 2  மில்லியன் தடுப்பூசியாக குறையவுள்ளது.

புதன்கிழமை வரை, கனடா 27 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை கனடியர்களுக்கு வழங்கியுள்ளது.

Related posts

ஆயிரக்கணக்கான போலி இரண்டு டொலர் குற்றிகள் கைப்பற்றப்பட்டன

Lankathas Pathmanathan

மோசமடையும் COVID நிலை – அவரசமாக கூடும் Ontario அமைச்சரவை

Lankathas Pathmanathan

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan

Leave a Comment