அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள் தனக்கு “மகிழ்ச்சியை” அளித்துள்ளதாக Ontario முதல்வர் Doug Ford தெரிவித்தார்.
அமெரிக்காவின் இரு அவைகளிலும் ஜனாதிபதி Donald Trump குடியரசுக் கட்சி பெரும் சரிவை சந்தித்ததை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய Doug Ford தனது அரசியல் கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார்
இந்தத் தோல்விகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி Donald Trump முழு பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
இந்தத் தேர்தல் முடிவுகள் Ontario மாகாணத்தின் எல்லை கடந்த வர்த்தகம், கனடிய ஏற்றுமதித் தொழில்களுக்கு புதிய சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளதால், தனிப்பட்ட முறையிலும் அரசாங்க ரீதியிலும் “இதைவிடத் தன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது” என Doug Ford தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
