அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் கனடாவின் “கவனம் மாறவில்லை” என கனடா-அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் Dominic LeBlanc தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, புதன்கிழமை (04) காலை கனடிய நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய Dominic LeBlanc இந்தக் கருத்தை வெளியிட்டார்.
அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் குறித்து கவலைப்படாமல், கனடா தன் கட்டுப்பாட்டில் உள்ள விடயங்களில் மட்டுமே கவனம் செலுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க பேச்சுவார்த்தை குழுவினருடன் இணைந்து இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கிய பணிகளை தொடர்ந்து முன்னெடுப்போம் எனவும் Dominic LeBlanc கூறினார்.
அமெரிக்க தேர்தல் முடிவுகள் குறித்து கனடியர்கள் விமர்சிப்பது ஆரோக்கியமானது அல்ல என குறிப்பிட்ட அவர், அதை நாங்கள் செய்யப் போவதுமில்லை எனவும் தெளிவாகக் குறிப்பிட்டார்.
அமெரிக்க வாக்காளர்கள் ஏன் ஒரு குறிப்பிட்ட திசையில் வாக்களித்தார்கள் என ஆராய்வது கனடியர்களின் வேலை அல்ல எனவும் சுட்டிக்காட்டிய அவர், அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் இணைந்து கனடாவின் நலனுக்காக உழைப்பதே தங்களின் ஒரே கடமை எனவும் தெரிவித்தார்.
