அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஆளும் ஜனநாயகக் கட்சி பெற்ற பெரும் வெற்றி, இறக்குமதி வரிகள் தொடர்பாகத் தான் எடுத்த அணுகுமுறை சரியானது என்பதை நிரூபித்துள்ளதாக Alberta முதல்வர் Danielle Smith தெரிவித்து
அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கைப்பற்றி ஜனநாயகக் கட்சி வரலாற்றுச் சாதனை படைத்துள்ள சூழலில் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
எல்லையோர வர்த்தகம், இறக்குமதி வரிகள் விதிப்பு போன்ற விவகாரங்களில் அமெரிக்க ஜனாதிபதியின் கொள்கைகளுக்கு எதிராக தான் கையாண்ட அழுத்தமான வர்த்தக உத்திகளுக்கு இந்த முடிவுகள் ஒரு சிறந்த சான்றாக அமைந்துள்ளதாக Danielle Smith குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க தேர்தல் முடிவுகள் அவருக்குச் சாதகமாகப் பேசப்பட்டாலும், புதிய Alberta கருத்துக் கணிப்புகளின்படி மாகாண மக்களிடையே Alberta முதல்வரின் தனிப்பட்ட செல்வாக்கும் ஆதரவு நிலையம் சரிவடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இருப்பினும், Alberta ஆளும் கட்சியான UCP கட்சியின் தீவிர வாக்காளர்களும் ஆதரவாளர்களும் தொடர்ந்தும் முதல்வருக்கு தங்களின் முழுமையான ஆதரவை வழங்கி வருவதாக அந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.
அமெரிக்கத் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து Ontario முதல்வர் Doug Ford வெளிப்படையாகக் கொண்டாடி உள்ள நிலையில், Alberta முதல்வர் தனது மாகாணத்தின் எரிசக்தி, வர்த்தகப் பாதுகாப்பை மையப்படுத்தி இந்த அரசியல் நகர்வை எதிர்கொண்டுள்ளார்.
