தேசியம்
செய்திகள்

கனடாவில் விரைவில் பொதுத் தேர்தல்?

கனடாவில் விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறக் கூடிய சாத்தியக்கூறுகள் தோன்றியுள்ளன.

Liberal கட்சியுடனான நம்பிக்கை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக Jagmeet Singh அறிவித்தார்.

“இந்த ஒப்பந்தத்தை கிழித்தெறிந்து விட்டதாக பிரதமரிடம் தெரிவித்தேன்,” என Jagmeet Singh புதன்கிழமை (04) கூறினார்.

NDPயின் இந்த ஒப்பந்தம் Justin Trudeauவின் சிறுபான்மை Liberal  அரசாங்கத்தை அதிகாரத்தில் வைத்திருக்க உதவியது.

இந்த நிலையில் குறிப்பிட்ட ஒப்பந்தத்தில் இருந்து தனது கட்சியை வெளியேறும் முடிவை Jagmeet Singh  வெளியிட்டார்.

இலையுதிர் கால நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னதாக ஆளும் கட்சியுடன் உறவை துண்டிக்க முடிவு செய்ததாக Jagmeet Singh தெரிவித்தார்.

Liberal கட்சியை “பலவீனமானவர்கள்”,  சுயநலவாதிகள்” என விமர்சித்த Jagmeet Singh, அவர்கள் கனடியர்களிடமிருந்து மற்றொரு வாய்ப்பை பெற தகுதியற்றவர்கள் எனவும் கூறினார்.

இந்த இரு தரப்பு ஒப்பந்தம் March 2022 இல் கையெழுத்தானது.

இது June 2025 இல் காலாவதியாக இருந்தது.

சிறுபான்மை அரசில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக இந்த ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டது.

நீண்டகால முற்போக்கான கொள்கைகளின் முன்னேற்றத்திற்கு பதிலாக நம்பிக்கை வாக்கெடுப்புகளில் Liberal கட்சிக்கு ஆதரவளிக்க இந்த ஒப்பந்தத்தில் NDP உடன்பட்டது.

Related posts

பிரதமருக்கும் Quebec முதல்வருக்கும் இடையிலான சந்திப்பு இரத்து

Lankathas Pathmanathan

மீண்டும் நான்காயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja

50 சதவீதத்துக்கும் அதிகமான கனேடியர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றனர்!

Gaya Raja

Leave a Comment