February 16, 2025
தேசியம்
செய்திகள்

அமெரிக்காவுக்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகளை இடை நிறுத்தும் கனடிய மாகாணங்கள்?

அமெரிக்காவுக்கு எதிரான பொருளாதார  நடவடிக்கைகளை இடை நிறுத்த கனடிய மாகாணங்கள் முடிவு செய்துள்ளன.

மாகாண அரசுக்கு சொந்தமான கடைகளில் இருந்து அமெரிக்க மதுபான விற்பனையை நிறுத்துவது உட்பட  Ontario, British Colombia, Newfoundland, Quebec, Nova Scotia மாகாணங்கள் அமெரிக்காவுக்கு எதிரான பொருளாதார  நடவடிக்கைகளை முடிவு செய்திருந்தன.

கனடிய தயாரிப்புகள் மீது அமெரிக்கா கடுமையான வரிகளை விதித்த மறுநாள் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை (04) முதல் இந்த பொருளாதார நடவடிக்கைகள் நடைமுறையில் வரும் என கனடிய மாகாணங்கள் தெரிவித்திருந்தன.

ஆனால் கனடிய பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரிகள் 30 நாட்களாக தாமதப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தமது முடிவை இடைநிறுத்த மாகாணங்கள் முடிவு செய்துள்ளன.

இது குறித்த அறிவித்தலை மாகாணங்கள் திங்கட்கிழமை (03) வெளியிட்டன.

எமது பொருளாதாரம் அமெரிக்காவை குறைவாக சார்ந்திருக்கும் நிலையை உருவாக்க வேண்டும் என் மாகாண முதல்வர்கள் தெரிவித்தனர்.

Related posts

பொது விசாரணை அழைப்பை நிராகரிப்பதில் இணையும் எதிர்கட்சிகள்

Justin Trudeau அரசாங்கம் வீழ்ச்சியடைய வேண்டும்: Quebec முதல்வர்

Lankathas Pathmanathan

Manitoba நெடுந்தெரு விபத்தில் பலியானவர்களின் விபரங்கள் வெளியாகின!

Lankathas Pathmanathan

Leave a Comment