February 16, 2025
தேசியம்
செய்திகள்

Toronto: 2024 முதல் பாதியில் வாரத்திற்கு ஐந்துக்கும் மேற்பட்ட வீடற்றோர் மரணங்கள்!

கடந்த வருடத்தின் முதல் பாதியில் வாரத்திற்கு ஐந்துக்கும் மேற்பட்ட வீடற்றோர் மரணங்கள் Torontoவில் பதிவாகியது.

2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வீடற்ற நிலையை எதிர் கொள்பவர்களிடையே சராசரியாக ஐந்துக்கும் மேற்பட்ட  மரணங்கள் பதிவாகியுள்ளன.

Toronto பொது சுகாதார பிரிவு (TPH) இந்த தரவை அறிவித்தது.

2024 ஆண்டு January 1 முதல் June 30 வரை மரணங்களின் எண்ணிக்கை 135 என புதிதாக வெளியிடப்பட்ட தரவுகள் சுட்டிக்  காட்டுகிறது.

இது 2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களை விட ஐந்து அதிகரித்த மரணங்களாகும் என் Ontario பிரேத பரிசோதகர் அலுவலகம் தெரிவித்தது.

ஆனால் 2022 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தை விட இது 20 குறைவான மரணங்களாகும் என கூறப்படுகிறது.

Toronto நகரம் 2022 இல் 189 வீடற்றோர் மரணங்களையும், 2023 இல் 150 வீடற்றோர் மரணங்களையும் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடாவில் துப்பாக்கிகள் தொடர்பான குற்றங்கள் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

உக்ரேனியர்களுக்கான அவசர பயணத் திட்டத்தை நீட்டிக்கும் கனடா

Lankathas Pathmanathan

 Ontarioவில் COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment