தேசியம்
செய்திகள்

Alberta மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து தீ ஆபத்து

Alberta மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் தீ ஆபத்து தொடர்ந்து தீவிரமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் தீ ஆபத்து தொடர்ந்தும் உள்ளதாக Alberta அரசாங்கம் கூறுகிறது.

தொடரும் வெப்பமான வானிலை Albertaவில் காட்டுத்தீயை மோசமாக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால் ஆபத்தான நிலைமைகள் நீடிக்கின்றன.

புதன்கிழமை (10) காலை வரை Alberta முழுவதும் 81 காட்டுத்தீ முறையிடப்பட்டுள்ளது.

இவற்றில் 27 காட்டுத்தீ கட்டுப்பாட்டில் இல்லை என கருதப்படுகிறது.

மாகாணத்தின் முதற்குடியின பகுதியில் ஒன்பது காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் Yukon, British Columbia, Ontario, Quebec ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு படையினர் உதவிக்காக Alberta சென்றுள்ளனர்.

New Brunswick, Oregon, Alaska ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு படையினர் உதவிக்கு எதிர்பார்க்கப்படுவதாக Alberta அரசாங்கம் அறிவித்தது.

Related posts

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan

Mexico உல்லாச விடுதியில் இரண்டு கனடியர்கள் மரணம்

Lankathas Pathmanathan

CRA குறித்த புகார்கள் 70 சதவீதம் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment