தேசியம்
செய்திகள்

Toronto நகர முதல்வர் வேட்பாளருக்கு எதிராக கொலை அச்சுறுத்தல்?

வியாழக்கிழமை (01) மாலை நடைபெற இருந்த Toronto நகர முதல்வர் வேட்பாளர்கள் விவாதம் இரத்து செய்யப்பட்டது.

Toronto நகர முதல்வர் வேட்பாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தலை தொடர்ந்து இந்த விவாதம் இரத்து செய்யப்பட்டது.

இந்த விடயத்தில் தம்மால் முன்னெடுக்கப்படும் விசாரணை குறித்து 102 நகர முதல்வர் வேட்பாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் காவல்துறையினர் தகவல் அனுப்பியுள்ளனர்.

இந்த அச்சுறுத்தல் காரணமாக பல வேட்பாளர்கள் தமது பொது நிகழ்ச்சிகளை இடை நிறுத்தியுள்ளனர்.

நகர முதல்வர் வேட்பாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து, சந்தேக நபர் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தேடப்படும் 29 வயதான Junior Francois Lavagesse

இந்த அச்சுறுத்தலுடன் தொடர்புடைய Torontoவை சேர்ந்த 29 வயதான Junior Francois Lavagesse என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Toronto நகர முதல்வர் இடைத்தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Related posts

பசுமைக் கட்சியின் தலைவிக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை கைவிடும் தீர்ப்பை இரத்து செய்ய முயற்சி!

Gaya Raja

Ontario மாகாண சபை கலைக்கப்படுகிறது!

Lankathas Pathmanathan

தற்காலிகமாக கனடாவுக்கு புலம் பெயர்ந்த உக்ரேனியர்கள் நிரந்தரமாக கனடாவில் தங்க முயற்சி

Lankathas Pathmanathan

Leave a Comment