October மாதத்தில் Toronto பெரும்பாக (GTA) வீட்டு விற்பனை சந்தை சுமார் 8 சதவீதம் சரிந்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு October மாதத்தில் வீடு விற்பனை 7.9 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக Toronto பிராந்திய Real Estate வாரியம் (TRREB) தெரிவித்தது.
பணவீக்கம், அதிகரித்து வரும் கடன் வாங்கும் செலவுகள், பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற சூழல் ஆகியவை இதற்கு காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த October மாதத்தில் மொத்தம் 5,603 வீடுகள் விற்பனையாகியுள்ளன.
இது கடந்த ஆண்டு October மாதத்தை விட 7.9 சதவீதம் குறைவானதாகும்.
ஆனாலும் September மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 1.2 சதவீதம் உயர்ந்துள்ளது.
Toronto பெரும்பாகத்தில் விற்கப்பட்ட வீடுகளின் சராசரி விலை $1,024,108 என பதிவாகியுள்ளது,
இது கடந்த ஆண்டை விட 2.7 சதவீதம் வீழ்ச்சியாகும்.
தவிரவும் ஒரு பொதுவான வீட்டைக் குறிக்கும் கூட்டு அளவுகோல் விலை (Composite benchmark price) 4.3 சதவீதமாக குறைந்துள்ளது.
October மாதம் 14,173 புதிய வீடுகள் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
இது கடந்த ஆண்டை விட 11.9 சதவீதம் குறைவாகும்.
தற்போது சந்தையில் மொத்தம் 25,098 வீடுகள் விற்பனைக்கு உள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
