கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட வட்டி விகித உயர்வின் முடிவில் உறுதியாக இருப்பதாக கனடிய மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய அரசு தனது புதிய வரவு செலவுத் திட்டத்தை வியாழக்கிழமை (05) வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற நிதி கூட்டுக் குழுவின் முன்பாக செவ்வாய்க்கிழமை (03) உரையாற்றிய வங்கியின் ஆளுநர் Tiff Macklem, வட்டி விகித உயர்வு, நாட்டின் நிதி நிலை குறித்து பல்வேறு விளக்கங்களை அளித்தார்.
கடந்த வாரம் வங்கியின் கொள்கை வட்டி விகிதம் 25 புள்ளிகள் உயர்த்தப்பட்டு 2.5 சதவீதமாக மாற்றப்பட்டது.
July 2023-க்குப் பின்னர் கனடாவில் வட்டி விகிதம் உயர்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்த நிலையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை அவசியமானதாக Tiff Macklem கூறினார்.
Mark Carney அரசாங்கத்தின் தற்போதைய செலவினக் கொள்கைகள், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வங்கி எடுக்கும் முயற்சிகளுக்கு எதிராக அமையவில்லை எனவும் அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.
