தேசியம்
செய்திகள்

கனடா புகலிடக் கோரிக்கை முறையில் அதிரடி சீர்திருத்தம்: புதிய விதிமுறைகள் நடைமுறை!

கனடாவின் புகலிடக் கோரிக்கை முறையை மிகவும் விரைவானதாகவும், முறையானதாகவும் மாற்றுவதற்கான புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

கனடிய அரசாங்கம் செவ்வாய்க்கிழமை (03) இந்த முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கனடாவின் குடிவரவு அமைப்பு, எல்லைகளை வலுப்படுத்தும் சட்டத்தின்’ (Strengthening Canada’s Immigration System and Borders Act) கீழ் இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன.

Mark Carney அரசாங்கம் மேற்கொண்டுள்ள இந்தத் தொடர் சீர்திருத்தங்கள் காரணமாக, கனடாவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட கணிசமாகக் குறைந்துள்ளது.

குறிப்பாக 2026-ஆம் ஆண்டு January முதல் August வரையிலான காலகட்டத்தில், புகலிடக் கோரிக்கைகள் கடந்த 2025-ஆம் ஆண்டை விட 52 சதவீதம் வரையிலும், 2024-ஆம் ஆண்டை விட 68 சதவீதம் வரையிலும் அதிரடியாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த மாற்றங்கள் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு தெளிவான சூழலை உருவாக்கித் தருவதோடு, கனடாவின் புகலிட முறையை எதிர்காலத்தில் மிகவும் நியாயமானதாகவும், நீடித்திருக்க கூடியதாகவும் மாற்றும்” என  கனடாவின் குடிவரவு, அகதிகள், குடியுரிமை துறை அமைச்சர் Lena Metlege Diab தெரிவித்துள்ளார்.

Related posts

Ontario மாகாண சபை தேர்தலில் தமிழர்கள் – நீதன் சான்

Lankathas Pathmanathan

பொதுத்துறை ஊழியர்களுக்கு ஊதியத்தை வரையறுக்கும் நீதிமன்ற தீர்ப்பை மேல்முறையீடு செய்யும் Ontario

Lankathas Pathmanathan

ஒரே மாதத்தில் 68,300 வேலைகள் இழப்பு: 6.5 சதவீதமாக உயர்ந்தது வேலையற்றோர் விகிதம்!

Lankathas Pathmanathan

Leave a Comment