September மாத வேலையற்றோர் விகிதம் 6.5 சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்த மாதம் கனடிய பொருளாதாரம் எதிர்பாராத விதமாக மொத்தம் 68,300 நிகர வேலை வாய்ப்புகளை இழந்துள்ளது.
ஒரே மாதத்தில் 68,300 வேலைகள் பறிபோயுள்ளதன் காரணமாக 6.5 சதவீதமாக அதிகரித்த வேலையற்றோர் விகிதம், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்த அதே மோசமான நிலைக்குத் திரும்பியுள்ளது.
கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை (09) இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
August மாதத்தில் ஏற்பட்ட 41,700 வேலை வாய்ப்பு சரிவைத் தொடர்ந்து, தற்பொழுது September மாதத்தில் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் August மாதத்தில் 6.4 சதவீதமாக இருந்த வேலையற்றோர் விகிதம் September மாதம் 6.5 சதவீதமாக குறைந்துள்ளது.
இந்த வீழ்ச்சியின் மூலம் 2026-ஆம் ஆண்டில் இதுவரை கனடிய வேலைவாய்ப்பு இழப்பு நிகர அளவில் 41,200 வேலை வாய்ப்புகளாக உள்ளது.
கனடிய நுகர்வோரையும் வர்த்தகச் சந்தையையும் நிலைகுலைய வைக்கும் வகையில் இந்த புதிய புள்ளிவிபரத் திணைக்கள அறிவித்தல் அமைகிறது.
September மாதத்தில் 9,200 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜனாதிபதி Donald Trump கனடா மீது விதித்துள்ள கடுமையான வர்த்தக வரிகள் அமுலுக்கு வந்த பின்னர் வெளியான முதலாவது முழுமையான வேலைவாய்ப்பு அறிக்கை இதுவாகும்.
இருப்பினும் இந்த வீழ்ச்சிக்கு அமெரிக்க வர்த்தகப் போர் காரணமல்ல என்பதைப் புள்ளிவிவரங்கள் நிரூபித்துள்ளன.
September மாதத்தில் Quebec மாகாணத்தில் 49,000 வேலை வாய்ப்புகள இழக்கப்பட்டுள்ளது..
இது நாடளாவிய ரீதியில் அதிக எண்ணிக்கையை கொண்ட மாகாணமாக Quebec மாகாணத்தை நிலை நிறுத்துகிறது.
Ontario, British Columbia மாகாணங்களில் தலா 20 ஆயிரம் வேலை வாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளது.
மாறாக Alberta மாகாணத்தில் புதிதாக 23,000 வேலை வாய்ப்புகள உருவாக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் 28-ஆம் திகதி மத்திய வங்கியின் வட்டி வீத முடிவுகள் வெளியாகும் நிலையில் இந்த வேலையற்றோர் விகித முடிவு வெளியாகியுள்ளது.
