தேசியம்
செய்திகள்

தமிழர் மரபியல் நடுவத் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?

தமிழர் மரபியல் நடுவ திட்டத்தின் தற்போதைய நிலை குறித்த சந்திப்பொன்று வார விடுமுறையில் நடைபெற்றது.

மாவீரர் துயிலும் இல்லத்திற்கான Whitby நிலக் கொள்வனவு, எதிர்பாராத சவால்கள், தற்போதைய நிலை, நன்கொடையாளர்களுக்கு விளக்கம், மீளளிப்பு சலுகை, தமிழர் மரபியல் நடுவத்தின் முதன்மை நோக்கங்கள் குறித்த  விபரங்கள் இந்த சந்திப்பில் வெளியாகின.

நன்கொடையாளர்கள், ஆதரவாளர்கள், ஊடக பிரதிநிதிகள் என அழைக்கப்பட்டவர்களுக்கான சந்திப்பாக இந்த சந்திப்பு அமைந்தது,

இந்த சந்திப்பில் தமிழ் மரபியல் நடுவத்தின் இயக்குனர் குழுவின் தலைவர் குமார் அழகரத்தினம், கஜேந்திரன் ஆறுமுகம், ஸ்ரீமாறன் இலங்கேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.

Whitby நகரில் தமிழ் மரபியல் நடுவம் (Tamil Heritage Centre) அமைப்பதற்காக கொள்வனவு செய்யப்பட்ட நிலத்தில் திட்டமிட்டபடி கட்டுமானப் பணிகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டதன் பின்னணி குறித்து குமார் அழகரத்தினம் முதலில் விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில்  பொருத்தமான மாற்று இடத்தில் இந்த திட்டத்தை நிறைவேற்ற நகர்வுகள் முன்னெடுக்கப்படுவதாக  நடுவத்தின் நிர்வாகத்தினர் கூறினர்.

இந்தத் திட்டத்தின் ஆரம்பம் முதல் தமிழ் இன அழிப்பு நினைவகத்திற்கு எதிராகச் செயல்படும் சில சக்திகளாலும், சமூக ஊடகங்கள் மூலமும் பல்வேறு எதிர்ப்புகளும், தவறான பரப்புரைகளும், அச்சுறுத்தல்களும் முன்னெடுக்கப்பட்டு வந்ததாக நடுவம் கவலை தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பில் தமிழ் மரபியல் நடுவம் ஊடகங்களுக்கு வழங்கிய அதிகாரப்பூர்வ அறிக்கை …..

THC – STATEMENT

Related posts

தமிழ்ச் சமூக மையத்தின் கட்டுமானதிற்காக $17.1 மில்லியனுக்கும் அதிகமான நிதி வாக்குறுதி!

Lankathas Pathmanathan

பாலஸ்தீன ஆதரவு முகாங்களை அகற்றக் கோரும் நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்துவோம்: காவல்துறை

Lankathas Pathmanathan

24 மணி நேரத்தில் Ontarioவில் 203,000 தடுப்பூசிகள்!

Gaya Raja

Leave a Comment