தேசியம்
செய்திகள்

எரிபொருள் விலையில் வீழ்ச்சி?

Toronto பெரும்பாக பகுதியில் (GTA) எதிர்வரும் நாட்களில் எரிபொருள் விலையில் பெரும் வீழ்ச்சி எதிர்வு கூறப்படுகிறது.

புதன்கிழமை (04) முதல் எரிபொருள் விலைகள் litre ஒன்றுக்கு 11 சதங்கள் வரை அதிரடியாக குறைய உள்ளதாக கணிக்கப்படுகிறது.

இந்த விலை வீழ்ச்சியின் மூலம் Petrol விலை litre ஒன்றிற்கு 167.9 சதங்களாகவும், Diesel விலை litre ஒன்றிற்கு 235.9 சதங்களாகவும் குறையும் என எதிர்வு கூறப்படுகிறது.

இது கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த எரிபொருள் விலையாகும்,

பொதுவாக இத்தகைய பெரிய விலை வீழ்ச்சி ஏற்பட்ட சில நாட்களிலேயே விலை மீண்டும் உயர்ந்து விடும் நிலைக்கு மாறாக இம்முறை இந்த விலை குறைப்பு மேலும் சில காலம் நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Hormuz நீரிணையில் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஆரம்பிப்பதற்கு சாதகமான சூழல் நிலவுவது, அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் பின்னர் மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களுக்கு விரைவான தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவை இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

Related posts

British Colombiaவில் வெள்ளம் காரணமாக 500 கால்நடைகள் மரணம்

Lankathas Pathmanathan

Naziகளுடன் இணைந்து போரிட்டவரை கெளரவித்ததற்கு ஆளுநர் நாயகம் அலுவலகம் மன்னிப்பு

Lankathas Pathmanathan

லெபனான் – இஸ்ரேல் வன்முறைக்கு முடிவு காண வேண்டும்: Justin Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment