கனடாவும் ஐரோப்பிய ஒன்றியமும் (EU) தங்களுக்குள் உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் Montreal உச்சிமாநாட்டில் ‘எதிர்காலத்திற்கான கூட்டணி’ என்ற புதிய ஒப்பந்தத்தை எட்டியுள்ளன.
இந்த உச்சி மாநாடு கடந்த சில ஆண்டுகளில் இரு தரப்பிற்கும் இடையே நடந்த மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த புதிய கூட்டணியின் மூலம் இரு தரப்பும் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளன:
இது கனடாவுக்கு ஆழமான இறையாண்மையை வழங்கும் ஒரு நேர்மறையான கூட்டணி என செய்தியாளர்களிடம் பேசிய கனடிய பிரதமர் Mark Carney குறிப்பிட்டுள்ளார்.
தவிரவும் உலகளாவிய அரசியல், பொருளாதார சவால்களுக்கு மத்தியில், கனடாவுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் ‘இணை உறுப்பினர்’ அந்தஸ்து வழங்குவது குறித்து கனடிய பிரதமர் Mark Carney, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் Ursula von der Leyen ஆகியோர் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளனர்.
