Ontario மாகாணத்தின் பற்றாக்குறை $16.9 பில்லியனாக அதிகரித்துள்ளது.
Doug Ford அரசாங்கத்தின் இலையுதிர் கால நிதி அறிக்கையில் இந்தத் தகவல் வெளியானது.
கடந்த March மாதத்தில் இந்தப் பற்றாக்குறை $13.8 பில்லியனாக மட்டுமே இருக்கும் என கணிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Ontario மாகாணத்தின் தற்போதைய நிதி நிலைமை, பொருளாதார வளர்ச்சி குறித்த இலையுதிர் கால நிதி அறிக்கையை நிதியமைச்சர் Peter Bethlenfalvy வியாழக்கிழமை (29) சமர்ப்பித்தார்.
மாகாணத்தின் பற்றாக்குறை கடந்த சில மாதங்களில் மட்டும் $3 பில்லியனுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அதிரடி வர்த்தக வரிகளால் மாகாணத்தின் பொருளாதாரம் மந்தமடைந்துள்ள சூழலில், தற்போதைய நிதியாண்டுக்கான பற்றாக்குறை கணிசமாக அதிகரிக்கும் என அமைச்சர் முன்னர் தெரிவித்திருந்தார்.
கடந்த 2025-26 நிதியாண்டைமாகாணம் $13 பில்லியன் பற்றாக்குறையுடன் நிறைவு செய்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
