தேசியம்
செய்திகள்

பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணி அமர்த்தினால் மட்டுமே சந்திப்பு: Mélanie Joly நிபந்தனை!

பணி நீக்கம் செய்யப்பட்ட Stelco தொழிலாளர்களை மீண்டும் பணி அமர்த்தினால் மட்டுமே அவர்களுடன் சந்திக்க அமைச்சர் Mélanie Joly நிபந்தனை விதித்துள்ளார்.

இதன் மூலம் Hamilton Stelco விவகாரத்தில், கனடியத் தொழில்துறை அமைச்சர் Mélanie Joly தனது நிலைப்பாட்டை மேலும் தீவிரப்படுத்தியுள்ளார்.

இந்த விடயத்தில் நீதிமன்ற தலையீட்டை  தவிர்ப்பதற்காக அமைச்சருடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த Stelco தொழில்சாலையின் அமெரிக்க உரிமையாளரான Cleveland-Cliffs கோரியிருந்தது.

ஆனாலும் “பணிநீக்கம் செய்யப்பட்ட கனடியத் தொழிலாளர்களை உடனடியாக மீண்டும் வேலைக்கு அழைத்தால் மட்டுமே உங்களைச் சந்தித்துப் பேசுவேன்” என அமைச்சர் Mélanie Joly நிபந்தனை விதித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை (29) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

முன்னதாக நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தில் புதன்கிழமை (28) பேசிய அமைச்சர், கனடிய முதலீட்டுச் சட்டத்தின் கீழ் அமெரிக்க நிறுவனம் வழங்கிய சட்டப்பூர்வ ஒப்பந்தங்கள் எக்காரணத்தைக் கொண்டும் மீறப்படுவதை அரசு ஏற்றுக்கொள்ளாது என தெளிவுபடுத்தி இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

கிரீன்லாந்தின் தலைநகரில் புதிய கனடிய தூதரகம் திறப்பு

Lankathas Pathmanathan

Ontario மாகாண சபையின் கோடைகால அமர்வு நிறைவுக்கு வந்தது!

Lankathas Pathmanathan

ஐந்தாவது அலையை எதிர்கொள்ள புதிய கட்டுப்பாடுகள்

Lankathas Pathmanathan

Leave a Comment