தேசியம்
செய்திகள்

ஐந்தாவது அலையை எதிர்கொள்ள புதிய கட்டுப்பாடுகள்

COVID தொற்றின் ஐந்தாவது அலையை எதிர்கொள்ள பல மாகாணங்கள் புதிய கட்டுப்பாடுகளை தொடர்ந்து அறிவிக்கின்றன.

British Columbiaவில் தலைமை சுகாதார அதிகாரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேலும் கட்டுப்பாடுகளை செவ்வாய்க்கிழமை (21) அறிவித்தார்.

மக்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பது தொற்று அவர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை நிர்ணயிக்கும் என அவர் கூறினார்.

புதன்கிழமை (22) முதல் British Colombiaவில் மதுக்கடைகளும் இரவு விடுதிகளும் மூடப்படுகின்றன.

திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகளை இரத்து செய்வதுடன் உடற்பயிற்சி நிலையங்களை  மூடவும் மாகாணம் முடிவு செய்துள்ளது.

Prince Edward தீவில், முதல்வர் கடுமையான கட்டுப்பாடுகளை செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

செவ்வாய்க்கிழமை முதல் மாகாணத்திற்கு செல்லும் பயணிகளுக்கான 4 நாள் தனிமைப்படுத்தலை அவர் அறிவித்தார்.

Nova Scotiaவின் தலைமை மருத்துவ அதிகாரி, ஒன்று கூட கூடியவர்களின் எண்ணிக்கையை குறைப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

இந்த நடைமுறை புதன்கிழமை அமுலுக்கு வருகிறது.

New Brunswick முதல்வரும் ஒன்று கூட கூடியவர்களின் எண்ணிக்கையை குறைப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

Alberta உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் booster தடுப்பூசிகளை வழங்க தீர்மானித்துள்ளது.

இறுதி தடுப்பூசியை 5 மாதங்களுக்கு முன்னர் பெற்ற எவரும் booster தடுப்பூசிக்கு  முன்பதிவு செய்யலாம் என செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

Related posts

கனடாவை பொருளாதார ரீதியில் பாதிக்கும் வரி கட்டணங்கள் செவ்வாய் நடைமுறைக்கு வரும்?

Lankathas Pathmanathan

Ontario மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படும் இராணுவத்தினர்!

Gaya Raja

மீண்டும் ஐரோப்பா பயணமாகும் பிரதமர் Trudeau!

Lankathas Pathmanathan

Leave a Comment