கனடா-ஐரோப்பிய ஒன்றிய (Canada-EU) உச்சிமாநாட்டில் புதிய Quebec மாகாண முதல்வர் பங்கேற்க போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க ‘கனடா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டை’ (Canada-EU Summit) முழுமையாக புறக்கணிக்க Quebec முதல்வர் Paul St-Pierre Plamondon முடிவு செய்துள்ளார்.
Quebec மாகாண தன்னாட்சியை காக்க இந்த முடிவை எடுத்துள்ளதாக PQ கட்சி குறிப்பிட்டது.
இந்த மாத ஆரம்பத்தில் Quebec மாகாண தேர்தலில் Paul St-Pierre Plamondon தலைமையிலான PQ கட்சி மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி பிரிவினைவாதக் கொள்கை கொண்ட PQ கட்சிக்கான Quebec வாக்காளர்களின் ஆதரவாக நோக்கப்படுகிறது.
இந்த நிலையில் Quebec மாகாணத்தை முழுமையான சுயாட்சி கொண்ட தனி நாடாக மாற்றும் தீவிர இறையாண்மைக் கொள்கை கொண்ட Paul St-Pierre Plamondon, சர்வதேச நாடுகள், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் மத்தியில் கனடிய மத்திய அரசின் கீழ் ஒரு மாகாணத் தலைவராக இந்த மாநாட்டில் பங்கேற்பதை விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்தப் புறக்கணிப்பு முடிவானது கனடிய மத்திய அரசுக்கும் புதிய Quebec மாகாண அரசுக்கும் இடையிலான இராஜதந்திர விரிசலை வெளிப்படுத்தியுள்ளது.
