Toronto பெரும்பாக நகரப் பகுதியில் (GTA) நடைபெற்று முடிந்த மாநகராட்சி, நகராட்சி உள்ளாட்சி தேர்தல்களில், பல தசாப்தங்களாக பதவியில் இருந்த மூத்த நகர முதல்வர்கள் பலர் தோல்வியைச் சந்தித்தனர்.
மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் வாக்காளர்கள் மாற்றத்திற்கு வாக்களித்துள்ளதை இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
Halton பிராந்தியம்: நகர முதல்வர்கள் அதிரடி வீழ்ச்சி!
Halton பிராந்தியத்தில் பல தசாப்தங்களாக ஆட்சியில் இருந்த மூத்த நகர முதல்வர்கள் அனைவரும் புதுமுக வேட்பாளர்களிடம் தோல்வியைச் சந்தித்துள்ளனர்.
• Milton: கனடிய அரசியல் வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் (46 ஆண்டுகள்) நகர முதல்வராக பணியாற்றி உலகச் சாதனை படைத்த Gord Krantz 25.4 சதவீத வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்துள்ளார். அவரை வீழ்த்தி George Minakakis 45 சதவீத வாக்குகளுடன் புதிய நகர முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
• Oakville: நீண்டகாலமாக நகர முதல்வராக இருந்த Rob Burton 20 சதவீத வாக்குகளை பெற்றார். இதில் 36 சதவீத வாக்குகள் பெற்ற Jeff Knoll மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.
• Halton Hills: தற்போதைய நகர முதல்வர் Ann Lawlor 30 சதவீத வாக்குகளை பெற்றார். Jason Brass 55 சதவீத வாக்குகளுடன் புதிய முதல்வரானார்.
• Burlington: தற்போதைய நகர முதல்வர் Marianne Meed Ward தனது பதவியை தக்க வைத்துக் கொண்டார்.
Peel பிராந்தியம்:
• Mississauga: நகரமன்ற உறுப்பினர் Alvin Tedjo 39 சதவீத வாக்குகளைப் பெற்று நகரின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
• Brampton: தற்போதைய நகர முதல்வர் Patrick Brown 55 சதவீத வாக்குகளைப் பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக நகர முதல்வர் பதவியைக் கைப்பற்றியுள்ளார்.
• Caledon: முன்னாள் நகர முதல்வர் மீண்டும் போட்டியிடாத சூழலில், Christina Early 59 சதவீத வாக்குகளை பெற்று நகர முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
York பிராந்தியம்:
York பிராந்தியத்தில் பெரும்பாலான நகர முதல்வர்கள் தங்களின் பதவிகளைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.
• Vaughan: முன்னாள் மாகாண அமைச்சர் Steven Del Duca 81.5 சதவீத வாக்குகளைப் பெற்று பிரம்மாண்டமாக மீண்டும் நகர முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
• Markham: நீண்டகால நகர முதல்வர் Frank Scarpitti 71 சதவீத வாக்குகளுடன் மீண்டும் வென்றார்.
• Richmond Hill: David West 83.5 சதவீத வாக்குகளைப் பெற்றுத் தனது பதவியைத் தக்கவைத்துக் கொண்டார்.
• Newmarket: எதிர்ப்பாளர்கள் எவரும் இல்லாததால் John Taylor போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
• Aurora: Tom Mrakas 57 சதவீத வாக்குகளுடன் மீண்டும் வென்றார்.
• Georgina: தற்போதைய பெண் நகர முதலவரை வீழ்த்தி, Dale Kerr 54 சதவீதத்துடன் புதிய நகர முதல்வரானார்.
• King Township: Steve Pellegrini 77 சதவீதம் வாக்குகளுடன் மீண்டும் வென்றார்.
Durham பிராந்தியம்:
• Oshawa: Tito-Dante Marimpietri 38 சதவீத வாக்குகளைப் பெற்று புதிய நகர முதல்வராகியுள்ளார்.
• Whitby: தற்போதைய பெண் நகர முதல்வர் Elizabeth Roy 51 சதவீத வாக்குகளுடன் மீண்டும் வென்றார்.
• Pickering: தற்போதைய நகர முதல்வர் Kevin Ashe 36 சதவீத வாக்குகளைப் பெற்று தனது பதவியை தக்க வைத்துக் கொண்டார்.
• Clarington: தற்போதைய நகர முதல்வரை வீழ்த்தி, Tom Dingwall 53 சதவீத வாக்குகளுடம் புதிய நகர முதல்வரானார்.
• Ajax: Marilyn Crawford 61% வாக்குகளுடன் மீண்டும் வெற்றியைப் பதிவு செய்தார்.
• Brock: Michael Jubb 90.9 சதவீதம் என்ற வாக்கு சதவீதத்துடன் மீண்டும் வென்றார்.
