தேசியம்
செய்திகள்

ICC ஆடவர் T20 உலகக் கோப்பை தொடரில் கனடா முதல் வெற்றி

ICC ஆடவர் T20 உலகக் கோப்பை தொடரில் கனடா தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

T20 உலகக் கோப்பை துடுப்பாட்ட தொடரின் முதலாவது ஆட்டத்தில் கனடிய அணி, அயர்லாந்து அணியை வெற்றி கொண்டது.

கனடிய அணி இந்த தொடரில் அறிமுகமாகிறது.

New York நகரில் இந்த ஆட்டம் வெள்ளிக்கிழமை (07) நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் 12 ஓட்டங்களால் கனடிய அணி வெற்றி பெற்றது.

20 ஓவர்கள் கொண்ட ஆட்டத்தில் கனடிய அணி 7 wicket இழப்பிற்கு 137 ஓட்டங்களை பெற்றது.

அயர்லாந்து அணி 7 wicket இழப்பிற்கு 125 ஓட்டங்களை பெற்றது.

2003 உலகக் கோப்பையில் பங்களாதேசுக்கு எதிரான வெற்றிக்குப் பின்னர், சர்வதேச துடுப்பாட்ட போட்டியில் கனடாவின் மிகப்பெரிய வெற்றியாகும்.

கனடாவின் அடுத்த ஆட்டம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (11) நடைபெறுகிறது.

Related posts

கனடிய தயாரிப்பான COVID தடுப்பூசியின் இரண்டாம் கட்ட மனித சோதனைகள் ஆரம்பம்

Lankathas Pathmanathan

Manitoba மாகாணத்திற்கான இலங்கை தூதர் நியமனம்

Lankathas Pathmanathan

கனடா – அமெரிக்கா போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்

Lankathas Pathmanathan

Leave a Comment