தேசியம்
செய்திகள்

சவூதி அரேபியாவிற்கான அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க கனடியர்களுக்கு அறிவுறுத்தல்!

சவூதி அரேபியாவில் தொடரும் தாக்குதல்கள் மத்தியில் கனடியர்களுக்கான அவசர பயண எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவிற்கான அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க கனடியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் அண்மைக்காலமாகத் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் ஏவுகணை, Drone தாக்குதல்களின் மத்தியில் தனது பயண எச்சரிக்கையைக் கனடிய அரசு அவசரமாக மாற்றியமைத்தது.

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தீவிரமடைந்துள்ளதால், கனடிய குடிமக்கள் எவரும் சவூதி அரேபியாவிற்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு கனடியர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இந்த அதிரடி அறிவிப்பு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் இராணுவப் பதற்றங்களின் பின்னணியில் கனடிய வெளியுறவுத்துறையினால் வியாழக்கிழமை (22) வெளியிடப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவின் தலைநகரான Riyadh உட்பட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்ந்து கவலைக்கிடமாக மாறி வருகின்றன என அந்த எச்சரிக்கை குறிப்பிடுகிறது.

சவூதி அரேபியாவில் தங்கியிருக்கும் கனடியர்கள் அனைவரும் மக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தவிர்க்குமாறும், உள்ளூர் ஊடகங்களின் பாதுகாப்புச் செய்திகளைத் தொடர்ந்து கவனிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related posts

Alberta பயணமான பிரதமர் Justin Trudeau !

Gaya Raja

தடுப்பூசி ஆணையில் வங்கிகளையும், தொலைத்தொடர்பு துறைகளையும் உள்ளடக்க அரசாங்கம் திட்டம்

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 25ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Leave a Comment