தேசியம்
செய்திகள்

Toronto நகர முதல்வர் தேர்தல்: இறுதி விவாதக் களத்தில் Olivia Chow – Brad Bradford

Toronto நகர முதல் தேர்தலின்  இறுதி விவாதம் வியாழக்கிழமை (22) நடைபெற்றது.

இந்த விவாதத்தில் பிரதான இரு வேட்பாளர்களான Olivia Chow, Brad Bradford ஆகியோர் நேருக்கு நேர் மோதினர்.

இதில் வரவு செலவுத்திட்ட பற்றாக்குறை, வாழ்வாதார செலவுகள், சொத்து வரி, வீட்டு வசதி திட்டங்கள் குறித்த கடுமையான விவாதம் நடைபெற்றது.

Toronto நகர தேர்தலுக்கு சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், CP24 தொலைக்காட்சி நடத்திய இறுதி நேர நேரடி விவாதக் களத்தில் இரு வேட்பாளர்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர்.

அண்மைய கருத்துக் கணிப்புகளின்படி Brad Bradford 38.4 சதவீத ஆதரவுடனும், Olivia Chow 37.9 சதவீத ஆதரவுடனும் மிக நெருக்கமான போட்டி நிலவுகிறது.

Toronto நகரசபைத் தேர்தல் இறுதி வாக்குப்பதிவு எதிர்வரும் திங்கட்கிழமை (26) நடைபெறவுள்ளது.

Related posts

காணாமல் போனதாக தேடப்பட்ட மூன்று மாத குழந்தை மீட்பு

Lankathas Pathmanathan

RCMP விமானம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயம்

Toronto நகர சபை தேர்தலில் போட்டியிடும் முன்னாள் மத்திய NDP தலைவரின் புதல்வன்

Lankathas Pathmanathan

Leave a Comment