COVID தொற்றின் மூன்றாவது அலை, முதல் இரண்டை விட மோசமானதாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் தடுப்பூசிகளின் வழங்கல் தொடரும் நிலையில் தொற்றின் மூன் றாவது அலையின் தாக்கத்தை எதிர்கொள்ள மருத்துவர்கள் தயாராகி வருகின்றனர்.
குறிப்பாக Ontario, Alberta, British Colombia ஆகிய மாகாணங்களில் மூன்றாவது அலை யின் தாக்கம் மோசமானதாக இருக்கும் என எச்சரிக்கப்படுகின்றது. Ontarioவின் தலைமை மருத்துவர், மாகாணம் மூன்றாவது அலையை எதிர்கொள்வதாக அறிவித்துள்ள போதிலும், ஏனைய இரண்டு மாகாணங்களான Alberta, British Colombia ஆகியன இதுபோன்ற அறிவித்தல் எதையும் வெளியிடவில்லை.