தேசியம்
செய்திகள்

துருக்கியுடன் கனடா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்?

அமெரிக்காவுடனான வர்த்தகப் போருக்கு நடுவே துருக்கியுடன் புதிய கூட்டணி ஒன்றை கனடா அமைத்துள்ளது.

கனடிய பிரதமர் Mark Carney துருக்கிக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் துருக்கியுடன் வியூகக் கூட்டாண்மை திட்டத்தை கனடா ஆரம்பித்துள்ளது.

இதில் துருக்கியுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கனடாவின் இலக்கு என தெரிவிக்கப்படுகிறது.

கனடிய பிரதமர் வியாழக்கிழமை (22) துருக்கிக்கு தனது முதல் அதிகாரப்பூர்வ இருதரப்புப் பயணத்தை ஆரம்பித்தார்.

துருக்கிக்கான தனது முதல் அதிகாரப்பூர்வ இருதரப்புப் பயணத்தில் துருக்கி நாட்டு தலைவர்களுடன் Mark Carney உயர்மட்டப் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்தார்.

அமெரிக்காவின் அதிரடி வரிகளால் கனடியப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், பிரதமரின் இந்தத் துருக்கி பயணம் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது என கனடிய அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

Related posts

Gordie Howe மேம்பால திறப்பு தாமதம்?

Lankathas Pathmanathan

மூன்றாம் கட்டத்தில் நுழையும் Nova Scotia

Gaya Raja

பிரதமருக்கும் – துணைப் பிரதமருக்கும் இடையிலான உறவில் விரிசல்?

Lankathas Pathmanathan

Leave a Comment