தேசியம்
செய்திகள்

கனடாவின் பணவீக்கம் 3.1 சதவீதமாக அதிகரிப்பு!

எரிபொருள் விலை உயர்வால் கனடாவின் பணவீக்கம் September மாதத்தில் 3.1 சதவீதமாக அதிகரித்தது.

கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் திங்கட்கிழமை (19) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

கனடாவின் நுகர்வோர் விலைவாசி பணவீக்கம் கடந்த மாதத்தில் 3.1 சதவீதமாக மீண்டும் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

எரிபொருட்களின் விலை அதிரடியாக உயர்ந்தது நுகர்வோர் சந்தையில் பணவீக்கம் மீண்டும் தலைதூக்குவதற்கு முதன்மைக் காரணியாக அமைந்துள்ளது.

August மாத கட்டுப்பாட்டிற்குப் பின்னர் September மாதத்தில் நாட்டின் ஒட்டு மொத்த பணவீக்க வீதம் 3.1 சதவீதத்தை எட்டியுள்ளது.

இது கனடிய மத்திய வங்கியின் 2 சதவீத இலக்கு வரம்பை விடஅதிகமானதாகும்.

எதிர்வரும் 28-ஆம் திகதி வெளியாகும் மத்திய வங்கியின் வட்டி வீத முடிவுகளில், இந்த பணவீக்க உயர்வு ஒரு மிகப்பெரிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம் வேலையற்றோர் விகிதம் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் இந்த பணவீக்க உயர்வு வெளியானது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்த கனடா

Lankathas Pathmanathan

இல்லம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் தமிழர் கைது!

Lankathas Pathmanathan

துணை பிரதமருக்கு எதிரான கொலை அச்சுறுத்தல் குறித்து சாட்சியம்

Lankathas Pathmanathan

Leave a Comment