தேசியம்
செய்திகள்

Guelph பல்கலைக்கழக Homecoming: 15,000 பேர் திரண்டனர்! காவல்துறையினருக்கு $91,000 செலவு, 6 பேர் கைது!

Guelph நகரில் கடந்த மாதம் அனுமதியின்றி நடத்தப்பட்ட பல்கலைக்கழக Homecoming வீதிக் கொண்டாட்டத்தில் சுமார் 15,000 பேர் திரண்டனர்.

இக்கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் Guelph காவல்துறைக்கு மொத்தம் $91,000 செலவாகியுள்ளது.

இதில் 6 பேர் இதுவரை கைதாகியுள்ளனர்.

இந்த விசாரணை குறித்த விபரங்களை Guelph காவல்துறை வியாழக்கிழமை (15) வெளியிட்டுள்ளது.

Septmeber 26 அன்று, Chancellor’s Way பகுதியில் இந்த பிரம்மாண்ட அனுமதியற்ற கொண்டாட்டம் நடைபெற்றது.

அன்றைய தினம் மட்டும் Guelph நகரம் முழுவதும் காவல்துறையினர் சுமார் 550 புகார்களைக் கையாண்டனர்.

இதில் 250-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் இந்த Homecoming கொண்டாட்டத்துடன் நேரடியாகத் தொடர்புடையவை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த 250 சம்பவங்கள் ஒரு சாதாரண சனிக்கிழமை அன்று காவல்துறையினர் கையாளும் வழக்கமான எண்ணிக்கையை விட இரு மடங்கிற்கு அதிகமாகும்.

இந்தக் கொண்டாட்டத்தில் மிகத் தீவிரமாக இருந்த ஒரு குறிப்பிட்ட மணி நேரத்தில் மட்டும் ஒரே மணித்தியாலத்தில் 31 புகார்கள் பதிவாகின.

கொண்டாட்டம் என்ற பெயரில் வீதிகளில் இறங்கிய சில சமூக விரோதிகளால் பொது சொத்துக்களுக்கு கடுமையான சேதம் விளைவிக்கப்பட்டது.

Guelph Transit பேருந்து நிறுத்தம், Chancellor’s Way பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள், தனிநபர் சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

பொது இடத்தில் மது போதை பாவனை, வன்முறையில் ஈடுபட்டது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய காரணங்களுக்காக 6 பேர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர்.

இதில் 7 வன்முறை தாக்குதல்கள், ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்தது, பொது அமைதியை கெடுத்தது, வாகனங்களைச் சேதப்படுத்தியது போன்ற 11 கடுமையான குற்றங்கள் பதிவாகின.

பொது இடத்தில் மது பாவனைக்கு சுமார் 70 மாகாண குற்ற அறிவிப்புகள் விநியோகிக்கப்பட்டன.

இந்தக் கட்டுப்பாடற்ற கூட்டத்தை கட்டுப்படுத்த 88 க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதற்கான பாதுகாப்புச் செலவு $91,000 ஆக உயர்ந்தது.

இதில் 22 அதிகாரிகள் ஊதியத்திற்கான நிதியை Guelph பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.

இந்த கூட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களின் ஒளிப்படங்களை வெளியிட்ட Guelph காவல் துறையின் தலைவர் Gord Cobey, சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்:

எதிர்காலத்தில் இதுபோன்ற பெரிய, அனுமதியற்ற வீதி கொண்டாட்டங்கள் நடப்பதை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் Guelph பல்கலைக்கழகம், மாநகராட்சி, மருத்துவமனை,  காவல்துறை ஆகியவை இணைந்து ஒரு புதிய சிறப்புக் கூட்டுப் பணி குழுவை அமைத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

Markham இடைத் தேர்தல்: ஏழாம் வட்டாரத்தில் இதுவரை ஏழு வேட்பாளர்கள்!

Lankathas Pathmanathan

Toronto தலைமை மருத்துவர் விரைவில் பதவி விலகல்?

Lankathas Pathmanathan

பத்து ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்தை பாதுகாப்புக்கு செலவிடுவதற்கு கனடா உறுதி

Lankathas Pathmanathan

Leave a Comment