தேசியம்
செய்திகள்

Calgary விபத்து: இரு பேருந்துகள், பல வாகனங்கள் மோதி 3 பேர் உடல் கருகி பலி – 16 பேர் படுகாயம்!

Calgary நகரில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

இதில் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மாநகரப் பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்ததால் இந்த விபத்து பெரும் பேரழிவாக மாறியது.

நகரின் வடகிழக்கு பகுதியில் வியாழக்கிழமை (15) மதியம் இந்த விபத்து நேரிட்டுள்ளது.

இந்த விபத்தில் இரண்டு மாநகரப் பேருந்துகள், பல தனியார் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன என Calgary காவல் துறையின் உயர் அதிகாரி Andy Woodward செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த விபத்து நடந்த உடனேயே ஒரு பேருந்தில்  தீப்பற்றிக் கொண்டது.

தகவல் அறிந்து 12 அவசரகால தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

விபத்துக்குள்ளான பேருந்து அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு மூலம் இயங்க கூடியது என்பதால், உடனடியாக விபத்து களத்திற்கு அபாயகரமான பொருட்கள் கையாளுதல் பிரிவு வரவழைக்கப்பட்டது.

இதில் காயமடைந்தவர்களில் 10 பேர் அவசர உதவி மருத்துவ வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஒருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 5 பேர் சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேலதிக  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இரண்டாவது பேருந்தின் ஓட்டுநர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டதால், தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அவரை மீட்டனர்.

இந்த மீட்புப் பணியின் போது ஒரு காவல்துறை  அதிகாரிக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாகாண முதல்வர் Danielle Smith, Calgary நகர முதல்வர் Jeromy Farkas ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நிகழ்ந்த பகுதி  முற்றிலும் மூடப்பட்டு காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பாரபட்சமான வர்த்தக நடவடிக்கைகள் காரணமாக கனடா மீது மேலதிக வரி விதிக்கும் அமெரிக்கா?

Lankathas Pathmanathan

இஸ்லாமிய அரசு தொடர்பான பயங்கரவாத குற்றச்சாட்டுகளை Calgary நபர் ஒப்புக்கொண்டார்

Pearson விமான நிலையத்திற்கு வெளியே காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

Lankathas Pathmanathan

Leave a Comment