தேசியம்
செய்திகள்

கனடிய தொழிலாளர்களுக்கு மாபெரும் நிதியுதவி: $350 மில்லியன் திட்டம் 

1,00,000 புதிய தொழிலாளர்களை உருவாக்க $350 மில்லியன் நிதியுதவி திட்டம் வெளியாக உள்ளது.

இது பிரதமர் Mark Carney-யின் $6 பில்லியன் Team Canada Strong திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

மத்திய தொழிலாளர் துறை செயலாளர் John Zerucelli வியாழக்கிழமை (15) இந்த நிதியுதவி திட்டத்தை வெளியிடவுள்ளார்.

தொழிற்சங்கங்கள், கல்லூரிகள் மூலம் புதிய தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும், உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் $350 மில்லியன் நிதியுதவித் திட்டத்தை மத்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளது.

Ottawa நகரின் அருகில் நடைபெறவுள்ள கூட்டத்தில் John Zerucelli இந்த நிதித் திட்டத்தை அதிகாரப்பூர்வமாகப் பிரகடனப்படுத்தவுள்ளார்.

எதிர்வரும் 2030-31 ஆம் ஆண்டிற்குள் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட Red Seal தகுதிச் சான்றிதழ் பெற்ற 80,000 முதல் 1,00,000 புதிய திறமையான தொழிலாளர்களை உருவாக்குவது இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

கனடாவில் தற்போது ஆண்டுதோறும் 20,000-க்கும் அதிகமான கட்டுமான, தொழில்துறை தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது.

இந்தத் திட்டம் இந்த தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் என எதிர்வு கூறப்படுகிறது

நாடாளுமன்றத்தில் தற்போது வேகமாக நகர்ந்து வரும் Bill C-39 பொருளாதாரச் சட்டத்தின் மூலம் கட்டுமானத் திட்டங்களுக்கு துரிதமான அனுமதிகளை வழங்கி வரும் வேளையில், அதற்கு தேவையான தொழிலாளர்களை உருவாக்க இந்த நிதி உபயோகிக்கப்படவுளது.

மத்திய Liberal அரசு தனது Team Canada Strong கொள்கையின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக $6 பில்லியன் நிதியைத் தொழிலாளர் உருவாக்கத்திற்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

Albertaவிற்கும் Montanaவிற்கும் இடையிலான தடுப்பூசி குறித்த இணக்கப்பாடு

Gaya Raja

கனடாவில் சீனாவின் தலையீடு குறித்து CSIS கவனம் செலுத்துகிறது

Lankathas Pathmanathan

Doug Fordக்கு  எதிராக போராட்டம் நடத்திய  பெண் காவல்துறையினரால் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment