தேசியம்
செய்திகள்

பிரிவினைவாத பாதையைத் தவிருங்கள்: Alberta வாக்காளர்களிடம் பிரதமர் வேண்டுகோள்!

பிரிவினைவாத பாதையைத் தவிர்க்குமாறு Alberta வாக்காளர்களை பிரதமர் Mark Carney வலியுறுத்தினார்.

பிரதமரின் Thanksgiving தின செய்தியில் ஒருமைப்பாடும் பொருளாதார வளமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Alberta கனடாவுக்குள் நீடிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பிரதமர் திங்கட்கிழமை (12) ஒரு ஒளிப்பதிவு செய்தியை வெளியிட்டார்.

அடுத்த வாரம் Alberta பொதுவாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் பிரதமரின் செய்தி வெளியானது.

பிளவுகளின் மேல் தேசத்தை கட்டியெழுப்ப முடியாது என பிரதமர் அதில் எச்சரித்துள்ளார்.

 

பொருளாதாரம், பாதுகாப்பு, மக்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறு உலகளாவிய நேரடி அச்சுறுத்தல்களை கனடா சந்தித்து வருகிறது எனப் பிரதமர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தகைய சவால்களை எதிர்கொள்ள நாம் எப்போதும் ஒன்றாக இணைய வேண்டும் என Mark Carney கூறினார்.

பல தலைமுறைகளாக Alberta மக்கள் தங்கள் உழைப்பால் கனடிய தேசத்தை கட்டியெழுப்ப உதவியுள்ளனர் என குறிப்பிட்ட பிரதமர், இதைப் பிரிவினையில் இருந்து பாதுகாத்து போராட நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Alberta நீண்டகாலமாக கொண்டிருந்த அதிருப்திகளை தனது அரசாங்கம் முழுமையாக கேட்டறிந்து தீர்த்து வைத்துள்ளதை Mark Carney தனது ஒளிப்பதிவு செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

வாடிக்கையாளர்களுக்கு ஐந்து நாட்கள் சேவை கட்டணத்தை மீள வழங்கும் Rogers நிறுவனம்

Lankathas Pathmanathan

அமெரிக்காவிடம் இருந்து 1.5 மில்லியன் தடுப்பூசிகள் செவ்வாய்க்கிழமை கனடா வரும்!

Gaya Raja

பணவீக்க விகிதம் அதிகரித்தது!

Lankathas Pathmanathan

Leave a Comment