இராணுவக் கொள்முதல் தன்னாட்சி பெற்றாலும் கனடாவுடன் கூட்டு ஒப்பந்தங்களுக்கு கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என கனடாவுக்கான புதிய France தூதர் தெரிவித்தார்.
உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் புதிய France தூதர் Hélène Farnaud-Defromont இந்தக கருத்தை தெரிவித்தார்.
French மொழியிலான செவ்வியில் அவரது இந்தக் கருத்து வெளியானது.
கனடாவுடன் புதிய அதிநவீன இராஜதந்திர பாதுகாப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்வதில் தங்களது நாடு எப்போதும் முழு விருப்பத்துடன் உறுதியாக உள்ளதாகக் Hélène Farnaud-Defromont பிரகடனப்படுத்தியுள்ளார்
பாதுகாப்புத் துறையை வலுப்படுத்த கனடாவுக்கு தங்களது மிகச் சிறந்த வழிமுறைகளை பகிர்ந்து உதவத் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.
